பக்கம்:புனை பெயரும் முதல் கதையும்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. வாசவன் ஏன் இந்தச் சொந்தப் பெயர்? என்னையே நான் கேட்டுக்கொண்ட சம்பவம் நிகழ்ந்தது 1944-ல், அது யுத்த காலம். தத்தம் பெயரை நாட்டுவதற்குப் பெரிய பெரிய வல்லரசு களெல்லாம் குண்டு மழை பொழிந்த பேராபத் தான காலமுங்கூட. இப்படிச் சுண்டக்காயிலிருந்து சுரைக் காய்வரை பெயர்ப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த பொழுது நான் மட்டும் பெயர் மாருட்டப் போராட்டம்’ நிகழ்த்திக் கொண்டிருந்தேன். அதற்குக் காரணம் இதுதான்: எஸ். சீனிவாசன் என்று ஒருவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். அவர் அப்படியே எழுதிக்கொண்டு போயிருந்தால் நான் சந்தோஷப் பட்டி ருப்பேன். ஆனால், நான் எழுதியதைக்கூட அவர் எழுதிய தாகத் தம்பட்டம் அடித்துக்கொண்டிருந்தார். இன்னுங் கூட அவர் கொஞ்சம் அதிகமாகப் போய், யாரோ ஒரு பயல் என் கதைகளை யெல்லாம் அவன் எழுதியதாகச் சொல்லித்திரிகிருனே!” என்று சொல்ல ஆரம்பித்தார். என் தகப்பளுரின் பெயர் எஸ் ஸில் ஆரம்பிப்பதாலும், என் பெயர் சீனிவாசனுக இருப்பதாலும், என்னில் அவர் உலாவத் தொடங்குவதா? என் இதயத்தில் எழுந்த கேள் வியை அவரிடமும் கேட்டேன். உலகத்தில் இரண்டு எஸ். சீனிவாசன்கள் இருக்க முடியாது. நீ வேண்டுமாளுல்