பக்கம்:புனை பெயரும் முதல் கதையும்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 புனைபெயரும் முதல் கதையும் பெயரை மாற்றிக்கொள்ளேன்!” என்ருர் அந்த என் நிழ gn}fTṁ. அந்தச் சமயத்தில், ஏன் இந்தச் சொந்தப் பெயர்?" என்ற போராட்டம் என்னுள் நிகழ்ந்தது. ஒரு புதுப் பெயர் புனையலாமா?-சிந்தித்தேன். இலக்கியத்தைப் புரட்டினேன். சீத்தலைச் சாத்தனர்கள்தாம் கண்ணுக்குத் தெரிந்தார்கள். பசுமை தெரியவில்லை. நிகண்டைப் புரட்டினேன். பகவனே ஈசன் மாயோன், பங்கயன், சினனே புத்தன்' என்ற மாதிரியில் பதினுேருவது தொகுதி நீண்டது. பன்னிரண்டாவது பெயர்த் தொகுதியைப் புரட்டினேன். அங்கு கிடைத்தது: 'வாசவன்' என் பெயரின் பிற்பகுதியில், கூட ஒரு வ'வைச் சேர்த்து விட் டால், இந்திரனின் உருவம் தெரிகிறது. அந்த எஸ். சீனி வாசனும் இந்த வ'வில் விழுந்து புரள முடியாதல்லவா? எழுத்தாளன் என்பவன் ஒரு பூக்காரனுக இருக்க வேண்டுமென்று நான் அடிக்கடி சொல்வது உண்டு. அவன் தரும் மலர்களின் விதவிதமான மணத்தைப் போல, எழுத் தாளனும் விதவிதமான கருத்து மலர்களே மனத்துடன் வாசகர்களுக்குத் தரவேண்டும். வாசவன்' என்பதற்கு 'மலர்களை விற்பவன்' என்ற ஒரு பொருளும் சிலப்பதிகாரத் தில் காணப்படுகிறது. - தான் என் வாசகர்களுக்கு அளிக்கும் மலர்கள் மண முள்ளவை என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு. கனகாம் பரமாக ஏதாவது உங்களுக்குத் தோன்றினல், அது அந்த எஸ். சீனிவாசனுக்குச் சொந்தமானதாகத்தான் இருக்கும்.