பக்கம்:புனை பெயரும் முதல் கதையும்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 புனைபெயரும் முதல் கதையும் அவனுடைய குறைபாடுகளேதான் எப்போதும் கண்ணில் பட்டுக் கொண்டே இருக்கும். உயர்ந்த சக்திகள் அவர் களுக்குத் தெரியாது. அது சமயம் இந்தப் புனை பெயர் போட்டு எழுதி, அவர்களைப் பாராட்டச் செய்து விட்டு, "இதை எழுதியது இந்தக் கைதான்; என்னை எப்பொழுதும் உருப்படாதவன்: புத்தி கிடையாது என்று சொல்வீர் களே, இதற்கு என்ன சொல்கிறீர்கள்?’ என்று சவால் விடத் துணிகிருன்.' எனக்கு இவர் வாதம் பிடிபடவில்லை; பிடிக்கவும் இல்லை. எனக்கு இது மாதிரியான சுற்றமும் இல்லை; யுக்தி யும் இல்லை. இதில் ஒரு சங்கடம் இருப்பதாக என்னுடைய இன் னுெரு எழுத்தாள நண்பர் சொன்னர். அவர் தன் சொந் தப் பெயர் போதாது என்று ஊரின் பெயரையும் சங்கீத வித்வான் மாதிரி சேர்த்துக் கொண்டிருப்பவர். 'புனை பெயரில் எழுதிவிட்டு, இது என்னுடைய கதை: எப்படி இருக்கிறது என்று கேட்டால், என்னைத் தெரிந்தவர்கள் ஏண்டா புளுகுகிருய் என்பார்கள். ஆகையால் சொந்தப் பெயரே போதாது என்று ஊரின் பெயரையும் நான் சேர்த்து வைத்துக் கொண்டிருக்கிறேன்; ஒன்றும் தெரியா மல் செய்து விடவில்லை, ஆமாம்!” என்ருர் அவர். சரி நம்ம கதைக்கு வருகிறேன். முதன் முதலில் என் சொந்தப் பெயரிலேதான் கதை களும் கட்டுரைகளும் எழுதி வந்தேன். சில அத்யந்த நண் பர்கள்கூட ஏதாவது புனைபெயர் வைத்துக் கொள்ளுங் களேன்; கிரிஸ்ப்பாக இருக்கும்,' என்று சொன்னர்கள். எனக்கும் அதில் கொஞ்சம் சபலம் விழுந்தது. அதை எப்படியோ அடக்கிக் கொண்டு விட்டேன். இடையில் ஆனந்த விகட னில் என்னுடைய சொந் தப் பெயரில் ஒரு சிறு கதை வெளிவந்தது. அதற்கு நண் பர்களுடைய பாராட்டுக்கள் கிடைத்த போதிலும், ஒரு நண்பரின் கோபத்திற்கும் நான் ஆளாக நேர்ந்தது.