பக்கம்:புனை பெயரும் முதல் கதையும்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* கலைப்பித்தன் சில ஆண்டுகளுக்கு முன் ஒருநாள்-அந்த ஒரு நாளிலே! ஆலயத்தில் பாதிரியார் என் தலையில் தண்ணிர் ஊற்றி, சுந்தரராஜன்’ என்று பெயர் வைத்தார். குவா, குவா ஒன்று அழுதேன். ஆம்; பிறந்த பொழுதும் அழுதேன், பெயர் வைக்கும் பொழுதும் அழுதேன்; எழுதும் பொழுது அழக்கூடாது என்பதற்காகத்தான் கலைப்பித்தன்' என்ற புனை பெயரிலே நான் புகுந்தேன். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன், முதன் முதலில் ஒரு கட்டுரை யெழுதி, அதை ஹிந்துஸ்தான்' என்ற வாரப் பத்திரிகைக்கு அனுப்பினேன். அதன் ஆசிரியர் திரு, ரா. நாராயண அய்யங்கார் என் கட்டுரையைப் பிரசுரித்து, என் புனை பெயரைக் கெளரவித்தார். பின்னர் தொடர்ந்து அதில் எழுதினேன். பத்திரிகை உலகில் நான் திரு ரா. நா அவர்கட்கு என்றும் கடமைப் பட்டுள்ளவன். - * இந்தப் பெயர் வெறும் பெயரல்ல. உண்மையிலேயே கலையின் மீது எனக்குப் பித்து: கன்னித் தமிழின்பால் எனக்குக் காதல். அடியேன் இருபத்து நான்கு மணி நேர மும் சிந்திப்பதற்காக ஆண்டவன் என்னை ஊனமாக்கி விட் டான் போலும்! கால் நடையின்றி இவரது தமிழ் நடை முழு வேகத்துடன் செல்கிறது என்று சுதந்திர தீபம்’