பக்கம்:புனை பெயரும் முதல் கதையும்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

艺垒 புனைபெயரும் முதல் கதையும் என்னும் என் நூலுக்கு முன்னுரை எழுதிய சுவாமி சுத்தா னந்த பாரதியார் சொல்கிரு.ர். 1946-ஆம் ஆண்டு நான் ஆசிரியனுக இருந்த கலைமல’ ரில் நக்கீர வாரிசு என்ற புனைபெயரில் புத்தக விமர்சனம் செய்து வந்தேன். அம்புலி’ என்ற சிறுவர் வாரப் பத்திரி கையில் கலையண்ணு' வாக இருந்தேன். ஆளுல்?... ஆனல் என்ற இந்த வார்த்தையை மனவேதனையுடன் வெளியிடுகிறேன். என் புனே பெயரோடு போட்டியிட்டு, இப்பொழுது எத்தனையோ கலைப்பித்தர்கள் தோன்றி விட்டனர். கீரைக் கடைக்கு எதிர்க்கடையாகக் கீரைக் கடையே வைக்கும் தமிழர்கள், கலப்பித்தன் என்ற என் பெயர்மீது காதல், அல்ல-அல்ல--மோகங் கொண்டு என் புனை பெயரில் புகுந்து வருகிருர்கள். இந்த உமா'வைக் கண்ணுற்ற பிறகாவது, அவர்கள் என் புனே பெயர் மீது கொண்ட மோகத்தைக் கை விடுவார்களா? கோவிலிலே வைத்த இயற் பெயரை விட்டுவிட் டானே!’ என்று ஒரு கும்பல் அங்கலாய்க்கிறது. யார் எதைச் சொன்னல் என்ன? என் புனை பெயர் என்ளுேடு இணைந்து விட்டது: ஆம்...!