பக்கம்:புனை பெயரும் முதல் கதையும்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. "மாறன்’ புனைபெயரின் முக்கிய லட்சியம், அது என்ன காரணத் திற்காகச் சூட்டிக் கொள்ளப்பட்டது என்பதைச் சொல் லாமல் இருப்பதுதான். தங்களுக்கு மட்டுமே பிரமாத மாகப் படும் ஒரு பைத்தியக்காரக் காரணத்திற்காக அந்தப் புனைபெயரை வைத்துக் கொண்டிருக்கலாம் அவர்கள்: அதை வெளிப்படையாகச் சொல்ல வெட்கப்படுவார்கள் சில எழுத்தாளர்கள். - 'தராபதி என்ற புனைபெயரில் முன்ளுெரு காலத்தில் என் கவிதைகள் வெளிவந்தபோது, மேலே சொன்னது. போல, புனைபெயரின் காரணத்தைச் சொல்ல நான் வெட்கப்பட்டது உண்டு. பயந்ததும் உண்டு. தராபதி” என்று ஒருபுனை பெயருக்குள் மறைந்து கொண்டு கவிதை கள் எழுதியதில் எனக்கு ஒர் அனுகூலமும் ஏற்பட்டது. ‘மணிக்கொடி’யில் எனது கவிதை இந்தப் புனைபெயரில் வெளிவந்தபோது, மணிக்கொடியை வரிவரியாகப் படித்து இன்புறும் என் இலக்கிய நண்பர்கள் இரண்டொருவர் என்னிடமே எனது கவிதையைப் பாராட்டிப் புகழ்ந் தார்கள். அவர்களுக்கு அப்பொழுதெல்லாம் தராபதி. என்பது நான்தான் என்று தெரியாது. நான் கவிதை எழுதுவதற்கு மிகவும் பயந்து கொண் டிருந்தேன். ஆகையால், எனது கவிகளைப் பற்றி பாரபட்ச