பக்கம்:புனை பெயரும் முதல் கதையும்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 புனைபெயரும் முதல் கதையும் மற்ற அபிப்பிராயங்களைத் தெரிந்து கொள்ளவும் கொஞ்ச காலம் வசதியளித்தது இந்தப் புனைபெயர். 'தராபதி' என்ற புனைபெயர், அதற்குரிய காரணத்தில் ரசனை குறைந்து விட்டதேைலா என்னவோ, அது என்னை விட்டு நழுவிப் போய்விட்டது. 'சுமதி' என்ற புனைபெயரை வைத்துக் கொண்டு ரேடியோ நாடக்ங்கள் எழுதினேன். சுமதி என்பது ஒரு பெண்மணியின் பெயராகவும் இருக்கலாமே என்பதை உணர்ந்ததும், ஆண்பாலுக்கே உரிய புனைபெயர் ஒன்றைத் தேடுவதில் தீவிரமாக முனைத் தேன். முன்போல விட்டுவிடக் கூடிய பெயராக இருக் காமல், நிரந்தரமாக வைத்துக் கொள்ளுதற்குரிய ஒரு நல்ல புனைபெயருக்காக சுமார் பத்து நாட்கள்வரை ஆராய்ந்தேன். அது தமிழ் வார்த்தையாகவே இருக்க வேண்டுமென்பதையும் முதலிலேயே தீர்மானித்துக்கொண் டேன். இன்றைய பிரபலத் தமிழ் எழுத்தாளர்களில் இருபது பேரின் புனே பெயர்ப் பட்டியலைக் கொடுத்திருந்தது ஒரு தமிழ்ப் பத்திரிகை. அவர்கள் தங்களுடைய புனைபெயர் களைக்கூடத் தமிழில் வைத்துக்கொள்ள விரும்பவில்லை என் பதைச் சுட்டிக் காட்டியிருந்தது, அந்தப் பத்திரிகை. அதைக் கண்டு நான் மிகவும் வருந்தினேன். நான் தென்பாண்டி நாட்டைச் சேர்ந்தவன். பாண்டிய மன்னர்களில் ஷெண்பக மாறன் என்பவன் ஒருவன். அந்தப் பெயர், அழகும் கம்பீரமும் கொண்டதாகத் தோன்றியது. தமிழ் வளர்த்த பழம் பெரும் மன்னன் பெயராகவும் இருக் கிறது. ஆகையால் நானும் அப்பெயரையே சூட்டிக் கொள்ள ஆசைப்பட்டேன். ஷெண்பக மாறன்’ என்பது சற்று நீளமாக இருந்ததால், பாண்டியன் என்ற பொதுப் பெயரை உணர்த்தும் மாறன்’ என்பதையே என் புனை பெயராகச் சூட்டிக் கொண்டேன்-போன மகா மகத்தின் போது. -