பக்கம்:புனை பெயரும் முதல் கதையும்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9

  • விக்கிரமன்'

மகாகவி பாரதியார் பத்திரிகையில் எழுதி வந்த காலத்தில் பல பெயர்களைப் பூண்டு ஒரே இதழில் பல கட்டுரைகள் எழுதுவாராம். பேராசிரியர் கல்கி அவர்களும், எஸ். வி. வி. அவர்களும் ஏன் புனைபெயர் பூண்டனர்? கல்கி அவர்கள் கல்கி, கர்நா டகம், ரா.கி. லாங்கூலன், தமிழ் மகன் என்றெல்லாம் பூண்டு கட்டுரைகள் வரைந்தாரே, ஏன்? விடை எனக்குத் தெரியாது! - என்னைப் பொறுத்தவரை புனைபெயர் பூணும் பழக்கம் கையெழுத்துப் பத்திரிகை நடத்திய காலத்து ஏற்பட்டது. ஒரே இதழின் பக்கங்களை நிரப்பப் பல பெயரில் எழுதும் கட்டாயம் ஏற்பட்டது. சு. வே. சுயோதனன், சாணவி, விக்கிரமன், பாண்டியன் இப்படியாகப் பல பெயரில் எழு திப் பக்கங்களைப் பூர்த்தி செய்து வெளியிடுவேன். - பத்திரிகைத் துறையில் பிழைக்கவும், தொண்டாற்ற வும் இறங்கியபோதுகூட, புனைபெயர் வைத்துக்கொள்ளும் கட்டாயம் ஏற்படவில்லை. பலருக்கு என் சொந்தப் பெயரே, புனைபெயரோ எனும் சந்தேகத்தை ஊட்டியிருக்கிறது. - வேம்பு என்று குறியிட்டு சிலர் எழுதி, லார், வேம்பு என்று எப்படிப் பெயர் வைத்துக் கொண்டீர்கள்?' எனக்