பக்கம்:புனை பெயரும் முதல் கதையும்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 புனைபெயரும் முதல் கதையும் கேட்பர். எனக்குச் சிரிப்புத்தான் வரும். சிறு வயதில் எனக்கு அழுகையே வந்திருக்கிறது. என் தாயிடம் ஓடி, 'அம்மா, எனக்கு மட்டும் ஏனம்மா இப்படிப் பெயர் வைத்தாய்? எல்லாரையும் போல கிருஷ்ணமூர்த்தி, ராம கிருஷ்ணன் என்று வைத்திருக்கக் கூடாதா?’ எனக் கேட் டேன். தாயாரின் சமாதானம் என்னைத் திருப்திப்படுத் துமோ இல்லையோ, சொந்தப் பெயர் பழகிவிட்டது. பழ காமல் என் செய்யும்? அமுத சுரபி'யின் ஆசிரிய பீடத்தில் அமர்ந்த பிறகும் பல வருடங்கள் நான் புனைபெயரை நாடவில்லை. ஒருமுறை மாணவர் பகுதிக்கு எழுத வேண்டியதாயிற்று; ஒரு கதை யும் எழுத வேண்டியிருந்தது. அப்போதுதான் புனே பெயரை நாடி ஒடினேன். எந்தப் பெயரில் எழுதலாம்? நான் எழுதுவதாகத் தெரியக் கூடாது!’-சிந்தித்தேன்: சிந்தித்தேன். கடைசியில் பழைய கையெழுத்துப் பத்திரி கைகள் நினைவுக்கு வந்தன. என்னுடைய பல நாமங்களிலே ஒன்றும் பிடிக்காத நிலையில், விக்கிரமன் விக்கிரமாவ தாரம் எடுத்து நின்றது. எப்படி அந்தப் பெயர் வந்தது? கையெழுத்துப் பத்திரிகையில் நான் ஏனே அந்தப் பெய ரைச் சூட்டிக் கொண்டிருந்தேன். ஒரே இதழில் விக்கிரமன் என ஒன்று, சொந்தப் பெய ரில் ஒன்று என எழுதினேன். ஸார், விக்கிரமன் என்று யாரோ எழுதுகிரு.ர்கள். நன்ருக இருக்கிறது; அவரைப் போன்றவர்களுக்கு இடம் கொடுங்கள்!” என்ற நண்பரின் வேண்டுகோளின்படி, விக்கிரமனையே அதிகமாக எழுதச் சொன்னேன். பலருக்குத் தெரியாது, வேம்பு என்ற முன் றெழுத்தும், விக்கிரமன் என்ற ஆறு எழுத்தும் ஒன்று என்று...