பக்கம்:புனை பெயரும் முதல் கதையும்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1O 'ரஸவாதி” சொந்தப் பெயரில் எழுதுவதற்குத் தைரியம் இல்லா தவர்கள்தான் புனைபெயரில் எழுதுவார்கள்’ என்கிற ஒரு கிண்டலான அபிப்பிராயம் சாதாரணமாக உண்டு. அப் படிப் பார்த்தால், எழுதத் தெரியும் என்று பேனப் பிடித்து முன் வருவதற்கே ஒரு துணிச்சல்தான் வேண்டும். நான் குறிப்பிடுவது இலக்கிய ரீதியான எழுத்தை, எழுதுவதெல் லாம் இலக்கியமாகி விடாது என்பது நம்மில் அநேகருக்குத் தெரியாத விஷயமா, என்ன? - - மனத்தில் நினைக்கும் கருத்துக்களைச் சொல்லவோ எழு தவோ நான் முன்வருவது அபூர்வம். ஆளுல் இந்தச் சந் தர்ப்பங்களில் கருத்தை ரசமாக சுவாரஸ்யம் குறையாமல் சொல்ல வேண்டும் என்பது என் ஆசை. என்னுல் அப்படிச் செய்ய முடிகிறது என்பது என் நண்பர்களின் அபிப்பிரர் யம். ஆகவே, நாற்பத்தெட்டாம் ஆண்டில் திருச்சி நேஷ னல் காலேஜ் மாணவனுக இருந்து எழுத்துத் துறையிலும், நான் காலடி வைத்தபோது, தகுந்த புனைபெயராக ஒன்று வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற மோகம் எனக்கு. நான் சமஸ்கிருத மாணவன். அந்த மொழி இலக்கியப் பயிற்சி எனது ரசனையை வளர்த்தது என்ருல் அது மிகை பல்ல. புனைபெயர் அந்தக் கல்லூரிச் சூழ்நிலையில் வட மொழி வழியிலேயே என்னையுமறியாமல் மனத்தில் உரு