பக்கம்:புனை பெயரும் முதல் கதையும்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 & புனைபெயரும் முதல் கதையும் வாகிவிட்டது. ரஸம் வததி இதி' (ரஸ்மாக எதையும் எடுத்துச் சொல்கிறவன்) என்று காகிதத்தில் எழுதினேன். வடமொழி இலக்கணப்படி அது ரளவோதி என்று அமை யும் அருமையான வார்த்தை. நான் புள கிதமடைந்தேன். எழுதாவிட்டாலும் பரவாயில்லை; இந்தப் புனைபெயர் அமைந்த அழகு ஒன்றே போதும் என்றுகூடத் தோன் றிற்று. ஆனல் கவலை பிறகுதான் தொடர்ந்தது. நல்ல புனே பெயர் கிடைத்தது. சரிதான், அதற்குத் தகுந்தாற்போல ரஸ்மாக எழுதவும் முடியுமா?-நல்ல வேளையாகத் தாய் மொழி அறிவும் வடமொழி இலக்கியப் பரிசயமும் எனக் குக் கைக்கொடுத்து நம்பிக்கை யூட்டின. தரமான கதை களே சுவாரஸ்யக் குறைவின்றி தொடர்ந்து எழுதி அதன் மூலம் சரியான இலக்கியப் பாதையில் செல்வதான பிரக்ஞை எனக்கு உண்டு. என் கதைகளைப் பற்றிப் பேசும்முன் புனைபெயரின் அமைப்பைப் பாராட்டியிருக்கிரு.ர்கள் பலர். சிலர் ரஸ் வாத வித்தை வருமோ உங்களுக்கு? அதனல்தான் இந்தப் பெயரோ? என்கிரு.ர்கள். - இரும்பைப் பொன்னக்கினலென்ன? நல்ல, கருத்துக் களுக்குக் கதை வடிவத்தில் அழகும் நித்தியத்துவமும் கொடுத்தாலென்ன? இரண்டுமே ரஸவாத வித்தைதான். ரோல்டுகோல்டை'யும் சொக்கத் தங்கத்தையும் பிரித்து இனம் கண்டு கொள்ளும் ரசிகர்கள் இருக்கும் வரையில், இந்த அசல் ரசவாத வித்தைக்கு என்றென்றும் கெளரவம் இருக்கும் என நான் நம்புவதில் தவறென்ன?