பக்கம்:புனை பெயரும் முதல் கதையும்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11

  • நவீனன்’

எதைப்பற்றி எழுதினுலும் அதற்கு என்ன தலைப்புச் சூட்டுவது, அதில் வந்து மோதுகிற பாத்திரங்களுக்குப் பெயர் எப்படி வைத்தால் நன்ருக இருக்கும், அத்துடன் எனக்குப் புனைபெயர் ஒன்று அவசியந்தான என்றெல்லாம் வெகுநாட்கள் வரையில் என்னை நான் உலுக்கிக்கொண் எழுதுவேன். என்னுடைய முழுப் பெயரையும் அப் படியே போட்டுக்கொண்டு விடுவேன்: அதில்தான் எனக் குத் திருப்தி இருந்து வந்ததாக ஒர் எண்ணம். ஆளுல் நவயுவன்' என்ற பத்திரிகையில் அடியேன் ஆசிரியனுக இருந்தபொழுது, சில சமயங்களில் பத்திரிகை களின் பக்கங்களை எப்படியாவது நிரப்ப வேண்டிய நிர்ப் பந்தம் ஏற்பட்டது. அப்பொழுது என்ன புனைபெயர் எனக்கு அந்தச் சமயம் தோன்றுகிறதோ, அதைக் கட்டுரை களுக்கு அடியில் போட்டுவிடுவேன்: அச்சில் வந்த பிறகு, அந்தப்பெயர் எவருடையது என்று எனக்கே ஐயமேற்பட்டு விடுவதும் உண்டு. இப்படிப்பட்ட புனைபெயர் பட்டியல்களுக்கு நடுவே தடுமாறிக் கொண்டிருந்த என்னிடம் ஒருநாள் என் எழுத்