பக்கம்:புனை பெயரும் முதல் கதையும்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 புனைபெயரும் முதல் கதையும் தாள நண்பர் சிரஞ்சீவி, உன் பெயர் இனி நவீனன் என்று வைத்துக்கொள். நீ எழுதும் சில கட்டுரைகள் நவீன முறையில் இருக்கின்றன. ஏன், எழுத்தாளர்களிடையே இருக்கும் எந்தப் பழக்க வழக்கங்களும் உனக்கு இல்லை. மிக நவீனமாக இருந்து வருகிருய்!” என்று என்னிடம் சமய சஞ்சீவிபோலச் சொன்னர். சொல்லிவிட்டு, மிஸ்டர். நவீனன்' என்று அழைக்கத் தொடங்கி விட்டார். அந்த நிமிடம் முதல், அரைக் கப் காப்பி (அப்பொழுது உண்டு) சாட்சியாக, ஒரு ஆறு பக்கச் சிறுகதையின் முன் னிலையில் சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு, நான் நவீ னன் ஆனேன்! புனே பெயர் கிடைத்த நிம்மதியில் நான் இருந்த பொழுது, ஒருநாள், நவீனன் குத்தப்பட்டார்!’ என்ற செய்தியை எனக்குச் சிலர் சொன்னர்கள். உடம்பில் எந்த விதமான நகக் கீறல்கூட இல்லாமல் நான் பத்திரமாக இருந்த போதுதான் இந்தச் செய்தி வந்தது. அதாவது எனக்கு நவீனன்' என்ற புனை பெயர் நாமகரணம் செய்த அதே சிரஞ்சீவி, தான் எழுதிய ஒரு கதையில் நவீனன் என்ற எழுத்தாளக் கதாநாயகனைச் சிருஷ்டித்து, அவனுக் குக் கத்திக் குத்தையும் கொடுத்து, என் புனை பெயருக்குத் திருஷ்டி கழித்து வைத்தார்! - இன்று, என்னுடைய இருபத்தைந்துக்கு மேற்பட்ட புனே பெயர்களை யெல்லாம் அடியோடு மறந்துவிட்டு, "நவீனஞகவே இருந்து வருகிறேன். வெகு பேர், என்னு டைய மூக்கில் இருக்கும் வெட்டுப்பட்ட தழும்பைக் கண்டு. விட்டு கத்திக்குத்து நவீனன் நான்தான் என்று இன்றும் எண்ணிக் கொண்டிருக்கிருர்கன்! -