பக்கம்:புனை பெயரும் முதல் கதையும்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 சுமார் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, 1944-ஆம் வருஷத்தில் இலக்கிய வாழ்க்கையை நான் தொடங்கிய போது க. ரா. என்ற பெயரில்தான் எழுத ஆரம்பித்தேன். கே. ஆர். கல்யாணராமன் என்ற என்னுடைய இயற்பெய ரைத்தான் க. ரா. என்று சுருக்கி இருந்தேன். இந்தப் பெயரில் கல்கி பத்திரிகையில் அப்போது மூன்று கட்டுரை கள் வெளியாகி யிருந்தன. - அதே வருஷம் சங்கீத அகராதி என்ற கட்டுரையை கே. ஆர்.கே என்ற பெயரில் ஆனந்த விகடனுக்கு அனுப்பி யிருந்தேன். அது மே மாத நடுவில் விகட னில் வெளி பாயிற்று. அதுதான் விகட னில் எனது முதல் கட்டுரை. பின்னர், புதுமை வ்ேண்டும்!’ என்ற கட்டுரையை எழுதி அதே கே. ஆர். கே. என்ற பெயரில் விகடனுக்கு அனுப் பியிருந்தேன். கட்டுரையைப் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொண்ட ஆசிரியர் ரீ தேவன், புதுமையான முறையில், ஒரு புனே பெயரை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளக் கூடாதா?’ என்று கேட்டார். - - என்னுடைய ஜன்ம நகத்திரம் மகம். ஆனதால் மகம்’ என்ற பெயரில் எழுதலாமா என்றேன், அதற்கு அவர்