பக்கம்:புனை பெயரும் முதல் கதையும்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 'ஆர்வி' என் முதல் கதை பிறந்த வரலாறு என்ன என்று எழுதுவதில் எத்தனையோ சங்கடங்கள் உண்டு. கங்கையும் காவிரியும் உற்பத்தியான இடங்களைப் போலவா முதல் கதை பிறந்த இடம்? இருக்கலாம்; இல்லா மலும் இருக்கலாம். ஆனல் ஒன்று மட்டும் உண்மை, மலை யுச்சியிலே பிறந்து பூமித் தாயின் மடியிலே தவழ்ந்து, வளர்ந்து, கடலிலே போய்க் கலப்பது போலத்தான் கதை களின் வரலாறும். கதை உயர்ந்த இடத்திலிருந்துதான் பிறக்கிறது. சமவெளியில்தான் பாய்கிறது. கடைசியிலே இலக்கிய சாகரத்திலேதான் போய்க் கலக்கிறது. சில ஜீவநதிகளாக விளங்குகின்றன. சில பாலாறு போலத் தான். மழை வந்தால்தான் தண்ணிர்; இல்லாவிட்டால் மணல்தான். ஒரு சமயத்திலே, மேடான ஓரிடத்தில் நாலைந்து கிளை வழியாக ஓடிவந்த தண்ணீர் ஒன்று சேர்ந்து கொண்டது. பிறகு ஒரு மொத்தமாக ஒடிச் சென்று பள்ளத்தை நோக்கி வந்தது. அதுபோலத்தான் என் முதல் கதையும் பிறந் தது. மிக மிகச் சாதாரண விஷயம். உண்மைக்கோ உலக நடைமுறைக்கோ ஒவ்வாத, ஒட்டாத சம்பவங்களும் அல்ல. என்ன எழுது, என்னே எழுது என்று அந்த