பக்கம்:புனை பெயரும் முதல் கதையும்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் முதல் கதை 萄剑 மூலக் கருப் பொருள்கள் பத்து மாதம் வளர்ந்து தாளுகப் பிரசவம் ஆவதுபோல் இயற்கை அவஸ்தையோடு உதிக் கவும் இல்லை; பிறக்கவுமில்லை. பின்னே எப்படித் தோன் நிற்று? முதல் முதல் எழுதிய ஒரு கதையோ கட்டுரையோ பிரசுரமாகும் அதிர்ஷ்டம் எல்லோருக்குமே கிடைத்து விடுவதில்லை. பத்திரிகைகளுக்கு கதை எழுதினுல் அது திரும்பி வரும் என்பதே எனக்குத் தெரியாது! திரும்பி வரும் என்று மட்டும் எனக்கு அப்போது தெரிந்திருந்தால், நான் எழுதத் தொடங்கியிருக்கவே மாட்டேன். கல்யா ணம் என்று சொன்னுல், அது கழுத்திலே மாலே போட்டுக் கொண்டு பெண்ணும் பிள்ளையும் கையைப் பிடித்துக் கொண்டு நலங்கு போன்ற விளையாட்டு விளையாடுவதுதான் என்று சிறு பெண்கள் நினைத்திருக்கிரு.ர்கள். இந்தக் காலத்துச் சிறு பெண்கள் அப்படி நினைக்கிருர்களோ, என்னவோ? ஆளுல் பதினேந்து வருஷத்துக்கு முந்தி, பதிலுை வயதான ஒரு பெண் அப்படித்தான் நினைத்தாள் என்பது எனக்குத் தெரியும். அந்தப் பெண் வேறு யாரு மல்ல; என் மனேவிதான். அவளைப் போலத்தான் கதைகள் விஷயத்திலும் நான் இருந்தேன். ஒரு பத்திரிகையிலே வெளியான ஒரு கதையைப் படித் தேன். மிகவும் நல்ல கதை. ஆளுல் அதைப் படித்த கானக்கு என்னவோ ஓர் ஏக்கம். அந்தக் கதையின் ஜோடனையிலே உண்மை இல்லை; கதையிலே உயிர்த்துடிப்பு இல்லை. தம்முடைய தினசரி வாழ்க்கையிலே, நாம் அறிந்தும், அறியாமலும் எத்தனையோ இலக்கியங்களை எழுதாமலே நடத்தி வருகிருேம் என்பது பலர் அறியாத உண்மை. உண்மையில் வாழ்க்கைதான் இலக்கியம். இலக்கியம் என்பது வாழ்க்கையின் தொகுப்பு. வாழ்க்கையும் இலக் கியமும் ஒன்றுதான் என்பதை உணராத நிலையிலா நாம் இன்று இருக்கிருேம்?. - ц–5