பக்கம்:புனை பெயரும் முதல் கதையும்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 0. புனைபெயரும் முதல் கதையும் நம்முடைய தினசரி வாழ்க்கையிலே நாடு, சமூகம்: குடும்பம் இவற்ருேடு ஒட்டிய எத்தனையோ நிகழ்ச்சிகள் இலக்கியப் படைப்புக்குப் பொருளாகின்றன. அந்த வகை யில் நாம் நம் குடும்பத்தையே முதலில் ஊன்றி, உற்று, விலகி நின்று பார்த்திருக்கிருேமா? இந்தக் கேள்வியைத் தான் அன்று என் இளநெஞ்சு அந்த உயிரற்ற உடலைப் பார்த்தபோது கேட்டதாக நான் இன்று உணர்கிறேன். விடை கிடைத்ததா? ஆம்: கிடைத்தது. என் கண்முன்பே ஒரு பெண் நின்ருள். அவளுடைய கணவன் நின்ருன். அவர்கள் இருவரையும் ஆட்டி வைக்க வென்றே பெற்றேர்கள், உறவினர்கள் நின்ருர்கள். ஏக் கம், ஊக்கம், உள்ளத்து உணர்ச்சிகள், மனப்பக்குவம், மனேதர்மம், அறிவு எல்லாமாகச் சேர்ந்து கொண்டு இரண்டு நாள் என்னை என்ன வெல்லாமோ செய்தன. ஒரே மூச்சாக உட்கார்ந்து, நான் நினைத்த குடும் பத்துக் கதையாக எழுதலானேன். எனக்குப் பிடித்த மாதிரிதான் அந்தப் பெண் பேசினுள். எல்லோரும் பேசி ஞர்கள். குடும்பமே என் இஷ்டப்படிதான் ஆடியது. *சென்னை போ’ என்ருல் போவார்கள். அவர்களை மட்டும் விட்டுவிட்டு வாருங்கள் என்ருல் வருவார்கள். எனக்கு எத்தனை பெருமை! படைப்புத் தொழில் செய்பவனுடைய இறுமாப்பும் அழுத்தமும் என் நெஞ்சிலே ஏறி நின்றன. எழுதி முடித்து, பத்திரிகைக்கும் அனுப்பி விட்டேன். முதல் கதையின் சுருக்கம் இதுதான்; புதிதாக மண மான இளந்தம்பதிகள். அவர்கள் வீட்டில் ஏக ஜனக் கும்பல். பெற்ருேர்கள் தொந்தரை வேறு. கணவனும், மனைவியும் தனித்துப் பேசிச் சிரிக்க ஒரு நிமிஷம்கூட இடைவேளை கிடைக்கவில்லை. பாவம், கடைசியில் தனிக் குடித்தனம் போகிருர்கள் பட்டணத்துக்கு. ஆல்ை, அங்கு தான் அவர்கள் கனவு சிதைவுறுகிறது. புருஷனும் மனைவி பும் எடுத்ததற்கெல்லாம் பூசலிடுகிருர்கள். அன்று பிரிவின்