பக்கம்:புனை பெயரும் முதல் கதையும்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் முதல் கதை 贺葛 பின் நிகழ்ந்த சந்திப்பில் தம்பதிகள் அடைந்த இன்பத் தைத் திரும்பப் பெறத் துடித்தார்கள். கடைசியில் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்புகிரு.ர்கள்.' அடுத்த இரண்டு வாரம்வரை கதை பற்றி ஒன்றும் காணுேம். என் நெஞ்சோ வெடித்துவிடும் போலிருந்தது. அதற்குள், கதை பிடிக்காவிட்டால் கதையைத் திருப்பி விடுவார்கள் என்ற செய்தி காதில் விழுந்தது. அட, கஷ்டமே!’ என்று இருந்தேன். ஒரு சனிக்கிழமை. தபால்’ என்ற குரல் கேட்டு வாசலுக்கு ஓடிவந்தேன். ஒரு பக்கம் பயம், படபடப்பு, மற்ருெரு பக்கம் ஏதோ ஒரு ஆசை அசட்டுத் தைரியம். தபால்காரன் ஒரு பத்திரிகையைக் கொடுத்து விட்டுப் போனன். பிரித்தேன். நெஞ்சு வெடிக்கப் பிரித்தேன். என் பெயர்! என் கதையின் பெயர்: என் கதையில் வந்த பெண்ணுக்கு ஒரு படம்! . ஆசிரியர் கிடக்கட்டும்; வாசிப்பவர் கிடக்கட்டும். அந்தத் தபால்காரன் வாழ்க! என் முதல் கதை-தனிக் குடித்தனம். அதன் பிரதி யைக் காணவில்லை. 39-ஆம் வருஷமோ 40-ம் வருஷமோ அது ஆனந்த விகட னில் பிரசுரமாயிற்று. அது எதற்கு இப்போது? வேண்டாம்; என்னை விட்டு விடுங்கள்!