பக்கம்:புனை பெயரும் முதல் கதையும்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ア ா ஆறுமுகம் இருபத்தைந்து வருடங்கள் இருக்கும். அப்பொழுது வயது பதினறு. மதுரையில் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது என் முதல் கதையை எழுதி, சென்னைப் பத்தி fகை ஒன்றிற்கு அனுப்பி வைத்தேன். ஒரு வாரத்திற்குள் பத்திரிகை ஆசிரியர் அதை எனக்குத் திருப்பி அனுப்பி விட்டார். அதற்காக நான் வருத்தமோ, கவலையோ அடையவில்லை. அதே கதையை வேருெரு பத்திரிகைக்கு அனுப்பினேன். அதையும் அவர் திருப்பிவிட்டார். நானும் சளைக்காமல் அதை இன்னொரு பத்திரிகைக்குத் தள்ளிவிட்டு, மூன்ருவதற்கும் அதே கதிதான் ஏற்பட்டது. இப்படியாக ஐந்து வருடங்களில் சுமார் இருபது கதைகள் எழுதி, அவற் றைப் பல பத்திரிகைகளுக்கும் அனுப்பி, ஆசிரியர்களுடைய *நன்றி யுடன் திரும்பப் பெற்றுப் பத்திரமாக வைத்துக் கொண்டேன். . . என் படிப்பு முடிந்ததும் சென்னையிலுள்ள இன்ஷ்-ரன்ஸ் கம்பெனி ஒன்றில் என் சகோதரர் வேலை வாங்கிக் கொடுத் தார். காலஞ்சென்ற எழுத்தாளர் திரு. கு. ப. ராஜ கோபாலன் அவர்களைச் சந்தித்துப் பழகும் வாய்ப்பு அங்கு சென்ற சில மாதங்களில் கிடைத்தது. தினம் நானும் அவரும் கடற்கரைக்குச் செல்வோம். அங்கே பல எழுத் தாளர்களும் வந்து கூடுவார்கள். அவர்களெல்லாம் எனக்கு