பக்கம்:புனை பெயரும் முதல் கதையும்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

亨德 புனைபெயரும் முதல் கதையும் திருந்தி விடுகிருன். பெற்ருேர்களுக்கும் அவனிடம் என்று மில்லாத பிரியம் ஏற்படுகிறது. கண் இழந்த கண்ணன்' என்ற இக்கதை 1936-ஆம் வருஷம் சுதேசமித்திரன் வாரப் பதிப்பில் சிறுவர் பகுதியில் வெளியானது. கதை சாதாரணமாக இருந்தாலும், அதில் தாயின் மனத் துடிப்பு மற்றவர்களின் மனத்தையும் உருக்குவதாக இருந்ததால், அது பத்திரிகையில் இடம் பெற்றது என்று நினைக்கிறேன். அதோடு எனக்குச் சன்மானமும் மூன்று ரூபாய் கிடைத்தது. இருபது வருடங்களுக்கு முன் அந்தச் சிறிய தொகை கிடைத்ததில் ஆச்சரியமில்லை. உடனே நான் பத்திரிகையை எடுத்துக்கொண்டு போய் கு. ப. ராவிடம் காட்டினேன். நான் கதை அனுப் பியதை அவரிடம் ஏற்கனவே சொல்லாததால் அவருக்கு ஆச்சரியமாகவே இருந்தது. பேஷ், என்னுடைய முதல் கதையும் சுதேசமித்திரனில்தான் வெளியாகியது. உங்கள் முதல் கதையும் அதே பத்திரிகையில் வந்திருக்கிறது. என்னைப்போல் நீங்களும் பெயர் எடுக்கவேண்டும். மேலும் மேலும் எழுதுங்கள்,” என்று ஆசீர்வதித்து உற்சாகப் படுத்தினர். பல இளம் எழுத்தாளர்கள் கதைகளை எழுதிக்கொண்டு வந்து அவரிடம் காட்டுவார்கள். அவற்றை யெல்லாம் அவர் பொறுமையாகப் படித்துப் பார்த்து, சில திருத்தங் கள் சொல்வார். - - நான் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கையில், அனுப் பித் திரும்பி வந்த கதைகளையே சில திருத்தங்களுடனும், தலைப்புக்களை மாற்றியும் பல பத்திரிகைகளுக்கு அனுப்பி னேன். அவை யனைத்தும் மள மள வென்று பிரசுரிக்கப் பட்டன. என் கதைகளில் அநேகமாய் கிராமியக் காட்சி களே சித்திரிக்கப்பட்டிருக்கும். அதற்குக் காரணம், நான் பத்து வயது வரைக் கிராமத்தில் வசித்ததே யாகும்.