பக்கம்:புனை பெயரும் முதல் கதையும்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் முதல் கதை .75 என் முதல் கதை இருபது வருடங்களுக்கு முன் வெளி: யானது. இதுவரை இருநூறு கதைகளுக்கு மேல் பிரசுர மாகியிருக்கின்றன. ஆனல் எனக்குப் புகழ் அளித்தது "க்ளத்து வாசலில்’ என்ற சிறு கதைதான். சந்திரோ தயம் என்ற பத்திரிகையின் ஆண்டு மலரில் வெளியான அக்கதை, பின்னர் கதைக் கொத்து’ என்ற புத்தகத்திலும் இடம் பெற்றபோது, பல தினசரிப் பத்திரிகைகள் புகழ்ந்து விமரிசனம் செய்தன. அக்கதையில் வந்த சம்பவங்கள் உண் மையாகவே நடந்தவை. அது என் மனத்தில் பத்து வருடங் களுக்குமேல் ஊறிக் கிடந்து வெளிப்பட்டதால் தான் அதற்கு அவ்வளவு சக்தியிருந்தது என்பதை உணர்ந்தேன். அம்மாதிரிக் கதைகளை எழுதிவந்த கு. ப. ராவும் அதைப் படித்து விட்டு ஆச்சரியப் பட்டார். ஆகவே, என் முதல் கதை கண் இழந்த கண்ணன்' என்ருலும், புகழ்தேடித் தந்த கதை களத்து வாசலில்’ என்றே சொல்ல வேண்டும். அதஞலேயே இன்றும் பத் திரிகாசியர்கள் என்னை அம்மாதிரிக் கதைகளையே எழுத வேண்டுகிரு.ர்கள். என்னை இந்தப் பணியில் ஊக்குவித்த அமரர் கு. ப. ரா.வை நான் மறக்கவே முடியாது.