பக்கம்:புனை பெயரும் முதல் கதையும்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 த. நா. குமாசஸ்வாமி என் கன்னிக் கதை, ஒர் இளங் குமரியைப் பற்றியே எழுந்தது-ஒரு பைந்தொடிப் பாவை, ஆய்கலைப் பாவை, அருங்கலப் பாவை தமர் தொழவந்த குமரிக் கோளத் தமர் இளங் குமரி என்று சிலப்பதிகாரம் உயர்வாகக் கூறும் தமிழகத்தின் தென் எல்லையில் நீலக் கடல் ஒரத் திலே நின்று நித்தம் தவம் செய்யும் அந்த தெய்வத்தைப் பற்றித்தான். சிறு வயதிலேயே பள்ளிப் பாடத்தைவிட எனக்குக் கதைகள் கேட்பதில்தான் அதிக ஆர்வம். இந்த நசையைப் பின்னும் கிளறி விட்டாள், என் அருமை அத்தை. அவள் தமிழ் நாடெங்கும் மூர்த்தி தலம் தீர்த்தங் களே முறையாகத் தரிசனம் செய்தவள். எத்தனையோ புராணக் கதைகள்--தேவர்களைப் பற்றிய அற்புதக் கதை கள்-மாகாத்மியங்களை எல்லாம் இரவு நேரங்களில் சொல் லுவாள். எனக்கு இனிமையான கனவுகள் வரும். தொடக்கத்தில் தமிழில் எனக்குப் பயிற்சியே போதாது. என் தந்தையின் விருப்பத்துக்கு இணங்கி, நான் ஸ்மஸ்க்ருதமே கற்றேன். காளிதாஸ், பவபூதி பாரவி, மகான் போன்றவர்களின் அருமையான பனுவல் களைப் படித்துப் படித்து இன்புறுவேன். அதே போல் காலேஜில் படிக்கும்போது ஆங்கில எழுத்தாளர்களின் இன்சுவை இலக்கியங்களை மாந்துவேன். இப்போது சிறு