பக்கம்:புனை பெயரும் முதல் கதையும்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் முதல் கதை ァ7 கதை' என்று நாம் குறிக்கும் ரசனைகளை அம்மொழி வாயி லாகவே கண்டேன். எனக்கு அவை போன்ற கதைகள் வனைய துடிதுடிப்பு. என் அன்னை மொழியாகிய தமிழில் அதை உருவாக்க எனக்குப் போதிய சொற்கள் இல்லை. இந்தச் சமயத்தில் பாரதியாரின் பாட்டுக்கள் பேர் உபகார மாக நின்றன. பின்னர் சிறுசிறு காப்பியங்களைப் பாடங் கேட்டேன். அப்புறம் சிலப்பதிகாரம். ஒரு பெரிய பொற் கவாடம் என் மனத்துள் திறந்தது. என்னே தமிழின் அழகு, தமிழ்க் கற்பனையின் விரிவு, அதன் சொற் செறிவு ! மயங்கினேன். சிறு வயதில் என் உள்ளத்துள் கூடு கட்டிய கற்பனை முட்டை வைத்தது. சிலப்பதிகாரத்தில் கன்னியா குமரியைப் பற்றிப் பல செய்திகள் காணலாம். தொன்மை யில் பஃறுளி ஆற்றிற்கும் குமரி ஆற்றுக்கும் இடையே எழு நூற்றுக்காவதம்-ஏழ்தெங்க நாடும், ஏழ் மதுரை நாடும் , ஏழ் முன்பாலே தாடும், ஏழ் பின்பாலே நாடும், ஏழ் குன்ற நாடும், ஏழ் குணகரை நாடும், ஏழ் குறும்பனே நாடும் நதி யும், பதியும் தடநீர் குமரி பெருங்கோட்டும் கடல்கொண்டு ஒழிந்தது என்ற உரைப் பகுதி--எனக்குப் பெருவியப்பைத் தந்தது. - மறைந்து போன லெமூரியாவை என் அகக்கண்ணுல் கண்டேன். என் கதையைத் தீட்டுவதற்குப் பரந்த பகைப் புலன் கிடைத்தது. ஆனல் என் கதையின் கரு இன்னும் நன்ருகத் தரிக்கவில்லையே பழைய தமிழகத்தையும், இந்தத் தெய்வப் பாவையையும் சேர்த்து எப்படி ஒருகதை உருவாக்குவது என்ற சிந்தனையிலேயே ஆறு மாதங்கள் சென்றன. நான் கன்யா குமரியை நேரே சென்று கண்டதில்லை. அதன் கடற்கரை, கோயில் முகப்பு யாவும் போட்டோவில் பார்த்ததுதான். இன்றளவும் நான் குமரியைக் கண்டவ னன்று-உண்மைக் குமரியைப் பார்த்துவிட்டால் என் கற்பனைக் குமரி மங்கி விடுமோ என்ற தளுல்தான். கற்பனை யில் காணும் செவ்வி, உண்மை உருவங்களில் இருக்கவே