பக்கம்:புனை பெயரும் முதல் கதையும்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

帝ぎ புனைபெயரும் முதல் கதையும் முடியாது. அந்த வசீகரமே வேறு. கன்யாமகுரி என்மானஸ் சுத்தரி. இத்தறுவாயில் எனக்குத் தெரிந்தவர் ஒருவர், கன்யா குமரிக்குப் போய்விட்டுத் திரும்பினர். அந்தத் தெய்வப் பாவையின் வண்ணப்படம் ஒன்றை அவர் எனக்குத் தந் தார். கையில் மணிமாலையும் புன்னகைக் கூட்டமான திருமுகமும் என் நயனம் விட்டு அகலவில்லை. நான் அவரைக் கேட்டேன்: "எதற்காக அம்பிகை அங்கே தவம் கிடக் கிருள்? புராணம் என்ன சொல்லுகிறது?’’ அவர் சொன்னுர்: அம்பிகை சிவபிரானைத் திருமணம் செய்துகொள்ள ஏற்பாடெல்லாம் ஆயிற்று. ஆனல் முக்கிய மான சீர்வரிசை ஒன்று வராமல் நின்று விடவே, சிவஞர் சினந்து, மனத்தை முடிக்காமல் மறைந்து விட்டாராம். அவர் வருகைக்குத்தான் அம்பிகை காத்திருக்கிருள். இந்த யுக முடிவில் மீண்டும் கடலிலிருந்து புதிய நாடுகள் தோன் றும்போது, அவர் திரும்புவாரெனச் சொல்லுகிருர்கள். தேவ ரகசியங்களை யார் அறிய முடியும்?' ஆளுல் மனிதனுடைய கற்பனை துருவிப் பாராத ரகசியங்கள் உளவோ? ஆ! கிடைத்துவிட்டது, நான் இது வரைத் தேடிய கதையின் வித்து. கொஞ்சம் கொஞ்சமாக என் கதையை எழுதினேன். மூன்று கடல்கள் அணையும் குமரிமுனை-நான் அதன் கரையிலிருந்து தொடுவானையும் தொடியோள் பெளத்தை'யும் நோக்குகிறேன். என்ன மறந்துவிட்டு, பழைய தமிழகத்துக்குத் தாவுகிறேன். பெயர் தெரியாத தமிழ் மன்னன் செங்கோல் ஒச்சும் நாடு. அவனுக்கு ஒரே பெண் குமரி. தாயற்ற குழந்தை. கண். ணுக வளர்க்கிருன் மன்னன். இளமையிலேயே அவள் மனம் சிவன் பால் ஒன்றி விடுகிறது. அக்கடவுளரையே மணக்க உறுதி பூண்கிருள். மன்னன் இதைப் பிள்ளைத்தன மென்று நினைக்கிருன். யுவதி ஆகிருள் குமரி. அப்போதும் இதே மன உறுதி. நாட்டு மக்கள் வற்புறுத்துகின்றனர் அரசனை, குமரிக்கு மணம் முடித்து விடுமாறு. அவள்