பக்கம்:புனை பெயரும் முதல் கதையும்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் முதல் கதை 79 வயிற்றில் பிறக்கும் மகனே, பின்னர் அரசுரிமையைத் தாங்க வேண்டியவன்-இந்தக் கவலை அனைவர்க்கும். குமரி மறுக்கிருள். கடைசியில் தந்தையின் சொல்லுக்கு இணங்கி, ஒரு நிபந்தனை விதிக்கிருள். எவனுெருவன் ஒரே இரவில் அரண்மனை எதிரேயுள்ள வெளியில் ஆயிரம் கோயில்களே எழுப்புவானே அவனுக்கே தான் உரியவள்" என்ற அவ ளுடைய அறிக்கை உலகெங்கும் பரவுகிறது. ரோமகம், மிசிரம், சாவகம் போன்ற இடங்களிலிருந் தும் இளவரசர்கள் வருகிருர்கள். ஆனல் எவராலும் அவ ளுடைய நிபந்தனையை நிறைவேற்ற முடியவில்லை. கடைசி யில் வடபுலத்திலிருந்து ஆதிய புத்திரன் என்னும் மாயாவி விசித்திரக் கணங்களுடன் தமிழ்ப் பகுதிக்குக் குமரியின் கைத்தலம் பற்ற வருகிருன். சுயம்வர அவையில் குமரி யைக் காண்கிருன். அவள் ஏவலைச் செய்து முடிப்பதாக உறுதி கூறுகிருன். அவனுடைய முகம், குமரியின் கற்பனை யில் உலாவும் ஒரு முகத்தோடு ஒத்திருக்கிறது. அவள் நாணித் தலைகுனிகிருள். தன் அறைக்குள் சென்று, இர வெல்லாம் கடவுளிடம் முறையிட்டுக் கொள்கிருள், இது தடக்குமோ? இதை நடக்க விடாமல் தடுத்து விடுங்கள்' என்று. - பொழுது விடிந்துவிட்டது. உலகத்துக்கே தெரியாத ஒரு மாயம் திகழ்ந்தது. மேள வாத்தியங்கள் முழங்கு கின்றன. குமரி கண்ணை விழித்து, எழினியைத் திறந்து பார்க்கிருள். அதிசயம்! வெறும் வெளியில் விண் நிவந்த கோபுரங்கள், ம்ணமகன் வந்து கதவைத் தட்டுகிருன். குமரி அவனுடன் ஆலயங்களைக் கணக்கிடச் செல்கிருள். ஆயிரத்துக்கு ஒன்று குறைகிறது. இது ஏன்?’ என்ற தற்கு, ‘என்னை இன்னுமா சோதனை செய்கிருய்? உன் கண்ணெதிரே இதோ பார், என் கடைசிக் கோயிலை” என்றவுடன் அந்த மாயாவி மறைந்து விடுகிருன். அண்ட மெல்லாம் சிதறும்படி புயல் குமுறுகிறது. விரிசடை