பக்கம்:புனை பெயரும் முதல் கதையும்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&# புனே பெயரும் முதல் கதையும் போன்ற முகில்களிடையே அரவுபோல் மின்னல் நழுவு கின்றது. வாளுெடு கடல் சேர்ந்த பயங்கரத் தாண்டவத்தை குமரி கண் இழைக்காமல் நோக்குகிருள். தமிழகம் கடலுள் மறைகிறது. அவளைச் சுற்றிப் பாறைச் சுவர்கள் மேல்லத் தோன்றுகின்றன. அவள் கண்ணிர் விடுகிருள். அவன் கல்லாகச் சமைந்து விடுகிருள். அன்று அவள் கண்ட அதிசயக் கூத்து, இன்னும் அந்த அம்பிகையின் சிலைக் கண் னில் தென்படுகிறது. ஆளுல், என்றைக்குச் சிவகிருபை வருமோ?’ என்று தான் கதையை முடித்து விட்டேன். என் நண்பர்களுக்கு இதைக் காட்டினேன். இதைப் பத்திரிகைக்கு அனுப்பு: போட்டாலும் போடுவார்கள்’’ என்ருன் ஒரு நண்பன். - 'எந்தப் பத்திரிகையில்?’ என்று கேட்டேன். தினமணிக்கு' என்ருன். நண்பன் பிழைகள் திருத்தி என் கதையை தின மணி’க்கு அனுப்பினன். இரண்டு வாரம் பதிலே இல்லை. அப்போது நவராத்திரி. ஒரு தாள் பகலில் தபால்காரன் என்னிடம் நீள அளவில் ஒரு பத்திரிகையைத் தந்தான். கைவிரல்கள் நடுக்குறத் திறந்து பார்த்தேன். என் கதை சந்தோஷக் கூச்சலிட்டேன். குதித்தேன். அடுக்களையில் வேலையாக இருந்த என் தாய், என்ன ஆபத்தோ என்று ஓடிவந்தாள். மகனுடைய அசட்டுத் தனத்தைப் பார்த்தாள். - - திரும்பி வராமல், என் கதை பத்திரிகையில் பிரசுர மாகியது என் உணர்வைக் கிண்டிவிட்டது. ஆனந்த விகட’ னுக்கும் ஒரு கதை அனுப்பினேன். அப்போதைய அதன் ஆசிரியர்கல்கி, தம்மை வந்து காணுமாறு கடிதம் எழுதி விருந்தார். போனேன். என் கதையை வியந்தததோடு, 'கன்யாகுமரியை ஏன் தம் பத்திரிகைக்குக் கொடுக்கவில்லை