பக்கம்:புனை பெயரும் முதல் கதையும்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் முதல் கதை & f யென்று வருத்தப்பட்டார். நல்ல ஊதியம் கிடைக்குமே!’ என்ருர். கதை எழுதினுல் பணம் வருமென்ற விஷயம் அதுவரை தெரியாது; கதை எழுதினுல் புகழ் ஒன்றே வருமென்ற நினைப்பு எனக்கு. இன்றையத் தமிழ் இலக்கியத்தில் எனக்கு ஒர் இடம் ஏற்படுவதற்கு இந்தக் 'கன்யா குமரியே காரண பூதமாக விளங்குகிருள். இந்தக் கதையை எழுதி இருபது ஆண்டு களுக்குமேல் ஆகின்றன. திப்பேத்தில் லாமாவின் உன் னதமான மடாலயமான போதாலா வே கன்யாகுமரி யாம். அவளுடைய வழிபாடு திப்பேத்து வரை பரவி யிருந்த அதிசயத்தைச் சமீபத்தில் ஒர் அமெரிக்க யாத் திரிகர் எழுதிய (Forbidden Land) என்ற நூலில் படித் தேன். பண்டைத் தமிழ் இலக்கியங்களில் தென்படும் (இன்று அருகிய) புத்தேள் நாடு' என்பது இவ்வம் பிகை யின் சக்தி பீடத்தைத்தான் குறிக்கின்றதோ? என் கன்னி முயற்சி ஒரு மனிதப் பிறவியைப் பற்றி இராமல், கடவுளாகத் திகழும் ஒரு கன்னிகையின் புகழாக அமைந்தது என் பாக்கியம். 'கன்யா குமரி நான் பெற் றெடுத்த தலைச்சன்; என் சீமந்த புத்திரி. அவள் வெல்க! அவள் வாழ்க! அவள் அருள் மலிந்த தமிழ் ஓங்குக!