பக்கம்:புனை பெயரும் முதல் கதையும்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 பூவை எஸ். ஆறுமுகம் நாள் காட்டிகள் பத்தையும், அவ்வப்போது வெளி யான ஏடுகள் நானுாற்று எழுபத்தி மூன்றையும் மூடி மறைத்துக் கொண்ட தற்பெருமையில் எக்காளமிட்டுச் சிரித்துக் கொண்டிருக்கும் மந்திர சக்தி தெய்வத்தால் படைக்கப்பட்ட எனக்கு இருப்பதாகத் தம்பட்டம் அடித்துக்கொள்ள மாட்டேன்; ஆளுல், மேற்சொன்ன மந்திர சக்தியை உணர்ந்து பார்த்து மகிழ்ச்சியடையும் தந்திர சக்தி என்னல் படைக்கப்பெற்ற என் முதல் கதைக்கு உண்டு. ஆகவேதான், என் எழுத்துக்கள் நூல் வடிவு அடையும் தருணத்தில், மறந்துவிடாமல் என் பேணுவுக்குத் தெரிவித்துக் கொள்வது வழக்கம். எண்ணிப் பார்க்கின்றேன்-இன்று நேற்றல்ல; நான் பேணு பிடித்த தொடக்க நாள் தொட்டு இற்றை நாள் வரை. ஏன் பேளுவைக் கையிலெடுத்தேன் ? என்ற இந்த ஒரே ஒரு கேள்விதான் என்னுடைய நெஞ்சத்தின் அடித் தளத்திலிருந்து எதிரொலி பரப்பிக் கிளம்புகிறது; ஆனல், இவ்விளுவுக்குப் பதில் தயாரிக்க என் மனச்சான்று இனங்கா விட்டாலும், அல்லது விடை சேகரிக்க வேண்டு மென்ற நியமத்தை ஒப்பாமற் போனலும், முன் கூறப் பட்ட அக்கேள்வி எனக்கு அளவிறந்த அமைதியை--