பக்கம்:புனை பெயரும் முதல் கதையும்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் முதல் கதை 莎器 ஆறுதலை-ஆனந்தத்தை விளைவித்துக் கொண்டுதான் இருக்கிறது. என் வாழ்க்கையிலே இதுவரை நான் காணுத-அநுப விக்காத அதிசயமென்றுதான் இந்த அநுபவத்திற்கு வரம்பு கட்டிக் காட்டத் தெரிகிறது. பிறைசூடியின் அருமந்தப் பிள்ளையாம் கார்த்திகை பாலனின் பக்திப் பெயருடன் இரண்டெழுத்துப் பட்டத்தையும் சுமந்து கொண்டு, நான யங்கள் புழங்கும் பிரசித்திவாய்ந்த பாங்க் ஒன்றிலே பொழு தைக் கழித்துக்கொண்டு இருக்க வேண்டிய நான், இப் பொழுது வெறும் இரண்டெழுத்துப் பெயரைத் தாங்கிய வாறு, எழுத்துக்களேயே நாணயமாக்கிப் பல்லாங்குழி ஆடி, இலக்கிய வாழ்க்கை விளையாட்டில் புன்னகை யுடன் முன்னேறி வருகின்ற இத்தகைய புதிய திரும்புமுனையை அதிசய மென்றுதானேபெயரிட்டு அழைக்க வேண்டும் ? ஆம் ! என்னை அரைப் பைத்தியமாகவோ முழுப் பித்துக்குளியாகவோ உரு மாற்றும் புண்ணியத்தில் பங்கு பெறத் துடித்த விதி'யின் கண்களில் பொடி மணலைத் துரவி, என்னுள் தன்னம்பிக்கையை வளர்த்துச் செழிக்கச் செய்த பெருமையின் நூறு சதவிகிதப் பங்கையும் உரிமை யாக்கிக் கொண்ட வெற்றி என் முதல் கதைக்கே உடைமை ! ‘எப்படி எழுத்தாளன் ஆனேன்? இரண்டாவது கட்டத்தில் குரல் கொடுக்கும் புதிர்க் கேள்வி இது. புதுக்கோட்டையில் மன்னர் கல்லூரி இடைநிலை வகுப்புக்கு எனக்கு அநுமதி தந்தபோது, பேராசிரியர் கல்கி அவர்களின் பார்த்திபன் கனவு’ என்னுடைய கண் களில் பட்டது. அப்போதே ரா. கி. அவர்களின் அருள் நோக்கு என் பேரில் விழுந்திருக்க வேண்டும். இல்லை யென்ருல், பேணு பிடிக்கும் பேறு எனக்குக் கிடைத் திருக்கவே முடியாது.