பக்கம்:புனை பெயரும் முதல் கதையும்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& 4 புனைபெயரும் முதல் கதையும் இது மட்டுந்தாளு ? இப்போது, ஐ. ஏ. எஸ். பட்டம் பெற்றுள்ள உயிர் நண்பர் திரு. டி. வி. சுவாமிநாதன் அவர்களின் தூண்டு தலும் உற்சாகமும் அன்று எனக்குக் கிடைத்து வந்ததனால் தானே இன்று இந்த இரண்டெழுத்துப் பெயரை நீங்கள் தினைவு வைத்துக் கொள்ளவும் இயலுகிறது ! தளர்ந்த நெஞ்சம் l-' என் எழுதுகோல் கிறுக்கித் தள்ளிய முதல் மூன்று கதைகளை நானே கிழித்தெறிந்த பின்னர், நான்காவதாக ஒரு கதை எழுதி அதைப் பட்டணத்துக்கு ரயிலேற்றிவிட ஏராளமான தபால் தலைகளைத் துணைக்கும் அனுப்பும்படி ஆயிற்று. கன்னி கழிந்தவள் கருக்கொண்டு ஈரைந்து திங்கள் கழிந்தால்தான் அவள் தாய்ப் பதவி வகிக்க முடியும். எனக்கு அன்னை வடிவமாகக் காட்சியளித்தவள் என்னையும் தாய் ஆக்கினுள், இடைநின்ற பத்து நாட் களிலும் புயலையும் பூகம்பத்தையும் ஊடாட விட்ட வண்ணம். கதையை அஞ்சலில் அனுப்பினேன்; அஞ் சேல். அபயம் !" என்ற நல்வாக்கும் கொடுத்தது பத்தாவது நாள் வந்த இதழொன்று. கதையை நாம் அனுப்பி வைத் தால், அவர்கள் அதை அச்சிட்டு அத்துடன் அவர்கள் செலவில் பத்திரிகை யையும் அல்லவா அனுப்புகிரு.ர்கள்? உணவு கொண்டேன்; உறக்கம் கொள்ளவில்லை. அத்துணை மகிழ்ச்சிப் பெருக்கு காரணம், நான் புனைந்த நான்காவது சிருஷ்டி என்னுடைய முதல் கதையாக மாறியது: அச்சி யற்றப் பெற்ற ஆதிக் கதை இது. இதன் பெயர்தான், தளர்ந்த நெஞ்சம். கதை வெளியான இதழ்: சுதேச மித்திரன் ஞாயிறு மலர் வெளியிட்ட ஆசிரியர்: உயர்திரு, "சாண்டில்யன் அவர்கள். . கதை: முருகன், வள்ளி இருவரும் காதலர்கள். அவன் அவளு. டைய ஆசை மச்சான்; அவள் அவனுடைய நேசக் கண்