பக்கம்:புனை பெயரும் முதல் கதையும்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& 5 - புனைபெயரும் முதல் கதையும் போது, நம்ப ஊர், பக்கத்து ஊர், எல்லாத்தையும் கதை யிலே எழுதிட்டியே? ஆளுங்க பேரைக்கூட விடலையே?...' என்று மகிழ்ந்தார்கள். ஆயிரத்தெட்டுக் கருத்து. மாறு: பாடுகளுக் கிடையிலுங்கூட, என் கதைகளே விரும் பிப் படித்து, உரிய பாராட்டுக்களை யார் மூலமாவது தூதனுப்பி அமைதி கண்டு வந்த அந்த நாளைய நண்பர்கள் சிலரது மான ஸிகமான வேண்டுதலுக்கு இணங்கியேதான் இன்று வரை என் கதைகளிலே என் பெயரை மறந்துவிட்டாலும், என் ஊரையும் சுற்றுப்புறங்களையும் மறந்துவிடாமல் திரும் பத் திரும்ப எழுதி வருகிறேன்! உண்மை ஒன்று : முதல் கதையை நான் முக்கால்வாசி மறந்துவிட்ட மாதிரிதான். இப்போது எனக்கு வேருெரு நினைவு வரு கிறது. உமா'வில் இம்மாதிரிப் பகுதியை ஏற்கெனவே தான் தொடங்கியபோது என் இலக்கிய நண்பர் ஒருவர் "முதல் கதை வரலாறு அவ்வளவு அவசியமென நான் நம்பு வது இல்லே என்று எனக்குப் பதில் அனுப்பி யிருந்தார். அவர் வழியைப் பின்பற்றி நான் மறந்துவிட்ட மாதிரி' எனக் குறிப்பிடவில்லே. முதல் காதல் முதல் இரவு முதல் குழந்தை-இவ்வரிசையில் வைத்தெண்ணப்பட வேண்டி யதுதான் முதல் கதை என்பது என் நம்பிககை. அக்கதை பிரசுரமான ஐந்தாறு மாத இடை வெளியில் எழுதப்பட்ட நாலைந்து கதைகள் கோவையில் தோல்வி கண்டன. பட்டப் பரீட்சைக்கு ஆறு நாட்களே எஞ்சி யிருந்தன. மலேக்கோட்டைப் பிள்ளையாரை நினைவில் கொண்டு, அடுத்த சிருஷ்டியைப் படைத்து அனுப்பினேன். உற்ற நண்பர்கள் சினந்தார்கள். பரீட்சை முடிந்ததும் எழுதலாகாதா என்று வேண்டினர்கள். என் இலக்கிய ஆர்வத் துடிப்பை அவர்கள் எங்ஙனம் உணர்வார்கள்?... ஆங்கிலப் பரீட்சைக்குப் படிக்க உட்கார்ந்திருந்த பொழுது, என் கதையின் நாயகியும் நாயகனும்தான் தோன்றினர் கள். பரீட்சை எழுதப் புறப்பட்ட நேரத்தில், எனக்கு