பக்கம்:புனை பெயரும் முதல் கதையும்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் முதல் கதை 87 உறைக்கடிதமொன்று வந்தது. சிந்தையறிந்து வாடி என்னும் என் கதை தேர்வு பெற்ற நல்ல சேதியைத் தெரி வித்திருந்தார் திரு. ஆர். திருஞானசம்பந்தம் அவர்கள். மாத இதழின் பெயர் நினைவு வரவில்லையெனில், வசந் தத்தை எண் ணிப் பாருங்கள்! இக்கதையே என்னுடைய முதற் கதையாக அமைந்திருந்தால், உண்மையிலேயே தான் பெரிதும் மனநிறைவு அடைந்திருப்பேன்! எப்படியோ, கதையின் கனவு பிறந்துவிட்டது. ஆண்டு கள் பதினெட்டுக்கு மேலாக ஒடியும்விட்டன. இப்போது, அமைதியின் கனிவுடன் இருக்கும் நான்; பழங்கதையை மீண்டும் எண்ணிப் பார்க்கிறேன். அந்த ஒரு முதல் கதை இல்லையென்ருல், என்னுடைய இத்தனை நூல்களுக்கும்! என்னுடைய இத்துண் கால உழைப்புக்கும் ஒரு பொருள் உண்டாகியிருக்காதல்லவா? ஆம்: உண்மைதான். என் வாழ்வின் ஜீவனே அந்த என் முதற்கதையில்தான் அடக்கம்! அத்தகையதொரு சுகமான நினைவில்தான். 'பூவை வின் கதைகள்’ என்ற ஓர் கதைத் தொகுப்புக்கு தமிழ்நாடு அரசாங்கம் முதற் பரிசளித்துக் கவுரவித்த ஆறுதலும் அடங்கிக் கிடக்கின்றது!...