பக்கம்:புனை பெயரும் முதல் கதையும்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

то வேம்பு இந்த மண்ணுலகில் முதன் முதலில் கீழே வீழ்த்து 'குவா குவா என்று கத்துகிருேமே அதுவே ஒரு முதல் கதைதான். - ... - வாழ்க்கையில் முதல் கதை என்பது ஒரே ஒரு முதை தான் ஒவ்வொரு அநுபவத்தின் போது தோன்றும். முதன் முதலில் பள்ளிக்கூடத்தில் சேரும்போது வகுப்பறையில் துழையும் அநுபவம். முதல் நாள் வேலையில் அமரும்போது ஏற்படும் அநுபவம்-எல்லாமே ஒரு கதைதான். ஆம்; கதை என்பதே ஏதோ மாயை அன்று. வாழ்க் கையில் கண்கூடாகக் காணும் காட்சியின் அழியா எழுத்துத் தான். கதை ரொம்பவும் நன்முக அமைந்து விட்டது லார் என்கிரு.ர்கள். நன்முக அமைவதற்குக் காரணம் மூலப். பொருள் ஒன்று எங்கோ இருக்க வேண்டும். ... -- நான் கதை எழுதினேன். எழுதுகிறேன். எழுதுவேன். முதன் முதலில் நான் எப்படிக் கதை எழுதத் தொடங்கி னேன் என்பதை இப்போது உட்கார்ந்து சிந்திக்கும்போது அதுபவம் அழகிய சம்பவங்களைக் கண்முன்னே நிறுத்து கிறது. அன்று இருந்த வேகமும் உற்சாகமும் இன்று இருக் கிறதா என்று எதிர்பார்க்க நினைக்கக்கூட முடியவில்லை.