பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/105

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

103'ஈயென இரத்த லென்றும்
இழி,'வென்றா னேற்போ 'ரின்மை
நோ'யென நுவலா முன்னே
நுணுகியோர்ந் தீந்தான்; நோற்ற
சேயெனச் சீமைக் குற்ற
சிறுமையைத் தீர்த்தான், 'சேமத்
தா' யெனுந் தகைமைத் தானோன்
தரணியில் தமிழ னன்றோ?

'ஏரஞ்சி யிளைத்தா'னென்றும்
இயம்பினோ ரில்லை; 'ஏற்ற
போரஞ்சிப் போனா' னென்றும்
புகன்றவ ரில்லை; பொல்லா
தாரஞ்சி யடங்க வாழ்ந்த
ஆற்றல்சால் தமிழன் தன்னைப்
'பாரஞ்சிச் சாவா' னென்றே
பாரதி பாடி வைத்தான்.

'நெஞ்சினி லுரமில் லாதும்
நேர்மையின் திறமில் லாதும்,
அஞ்சியே தமிழர் சாவ
தவனியி லுண்மை யாயின் ,
'விஞ்சைய' ரெனஇங் குற்று
விரவினோர் பயந்த வேண்டா
வஞ்சகப் பொய்ப்பு ராணம்
வழங்கிய நஞ்சா லன்றோ?

வாசுகி கயிறாய்த் தேய
வாருதி கடைந்த தென்ன?
கீசகன் கிடைக்க வீமன்
கிழித்துண்டை செய்த தென்ன?
மூசிக வூர்தி யோன்தன்
முகம்மாறு பட்ட தென்ன?
கோசிகன் கதைக ளென்ன ,
கொஞ்சமா தமிழ கத்தே!