பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106



வாடிநின் றிருந்த தங்கள்
வதனங்கள் மலர்ந்து, வாய்த்துக்
கூடிநின் றிருந்தோர், ' இன்றிக்
குவலயத் தியல்பை யெல்லாம்
நாடிநன் கறிந்து நாங்கள்
நலமுற நவின்றீ' ரென்னத்
தேடிநின் றிருந்த நண்பன்,
'தெளிவித்தீ ரெனினு மையா!

'ஊரிது, வுவப்பூட் டாநும்
முளத்தினுக் குலைவைத் தீர்த்து;
மோரது வுவப்பை யூட்டி
முகத்தினை மலர்த்தும் முன்னே,
நீரது வுவப்பை யூட்டும்,
நேர்ந்தினிக் குளிப்பீ ராயின்!
வேரிது; விலகி வாரீர்
வீட்டுக்குச் செல்வோ' மென்றான் .