9
சத்தியத்தின் இருப்பிடம் தூய உள்ளம்; சத்தியந்தான் பிரம்மம்! இதுவே ஆனந்தநிலை; இதை நீங்கள் ஏன் அறிந்து கொள்ளாது துன்புறுகிறீர்கள்? என்று கேட்டது சாத்விகம்.
இல்லை அண்ணா! நாங்கள் கேள்விப்பட்டது இதற்கு நேர் மாறாக உள்ளது. பக்தி ஒன்றுதான் நம்மைப் பகவானிடம் அழைத்துச் செல்லுமாம்! ஆழ்வார்களும், நாயன்மார்களும் மக்கள் நலன்- பிறப்பின் பயன் பெற நேர் பாதை அமைத்துள்ள னராம்! அதன் பெயர், பக்தி மார்க்கம் என்பதாம் என்றது ரஜஸ், ஆம் அதில் என்ன சந்தேகம், அதுவே ராஜமார்க்கம் என்றது தமஸ்!
'அருமைத்தம்பிகளே!' நானறிந்த அளவில் உபநிசத்துக்களின் வழிகாட்டுதல் தான் மிகச்சரியான பேதங்களற்ற உலக அறிஞர்கள் உளம் மகிழ்ந்தேற்றுக் கொள்ளக் கூடிய வம்பும் வழக்கும் வழிமறிக்காது துன்பமும் துயரமும் தொடர்ந்து வராத சுவர்க்கவழி'. 'மனோமய ப்ராண சரீர நேதா பிரதிஷ்டததோ அன்னே இருதயம் சந்நிதாய ; பிரம்மம், மனோமயமனது உயிரையும் உடலையும் இயக்குவது. அன்னத்தை உண்டு வளரும் உடல் இருப்பிடமாய்க் கொண்டு இருதயத்தில் வாசம் தென்கிறது, என்கிறது. உபநிசத்து. அதிபூதம், அதி தெய்வம். அதியாத்மம் - ஐந்து பூதங்களின் ஐந்து சக்திகளின் அளவான ஒன்றிப்பின் பிரதி உருவமே உடலும் உயிரும்; உள்ளத்திற்காக அமைந்துள்ள பாத்திரமே உடலும் உயிரும். உள்ளத்தைத் துய்மையாக்கின் அதுவே பிரம்மம் உறையுமிடம். பிரம்மம் நமக்குப் புறத்தே இல்லை. அது ஒரு பொருளும் அன்று, கோரிப்பெறுவதும் அன்று.
பக்தி நம்மை நப்பாசையில் கொண்டு விட்டுவிடும். ஆடலும் பாடலும் அவனேக் காட்டமாட்டாது. கடைசி ஏமாற்றத்துக்கு, மரண பயத்துக்கு ஆளாக வேண்டி நேரிடும்; நிம்மதி பக்தியினுல் கைகூடாது.