பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பச்சைப்பொன் வண்ணச் சீலை
பாங்காகத் தரித்துப் பாரோர்
நச்சும்தேன், கனி, காய், நன்னிர்
நல்கியே நலிவு தீர்த்து
’மெச்சுந்தா யாதற் கன்றம்
மேகந்தோய்ந் திருந்த குன்றும்
இச்சித்த’ தெனவே வானில்,
இயங்கினா னினிக்க வெய்யோன்,

நயம் புகு கருத்தை நாடி
நவிலுதல் பருக நல்லார்,
’கயம்புகு மதுக ரங்கள்
கமலங்கண் டிருந்த’ தென்னச்
சுயம்புகு முளத்தி னோடும்
சோர்வின்றிக் குந்திச் சொக்கி
’யியம்புக ஐயா! எங்கட்
கெதுவேனு மினியு’ மென்றார்,

”பல்லாண்டு கட்கு முன்னிப்
பைந்தமிழ்ப் பாரி லோரூர்!
சொல்லாண்டு கொண்டு வாழும்
சுதந்திர மக்கள்! சோரா
தில்லாண்டு, மனிதப் பண்பா
மியல்பாண்டு மெதிர்ப்போர் மீதில்
வில்லாண்டு, வெற்றி யாண்டு,
விளங்கினார், விதியை யாண்டே!

கழலுடை வேலி முட்சூழ்
கவின்மிகு சிறூ ரில்,போர்த்
தொழிலுடை வீர ருண்ணீர்
தோன்றிடத் தொட்ட கூவல்,
எழிலுடைக் கானல் யானை
இரவில்நீ ரருந்த வந்தால்,
குழலிடைக் குரல்கொள் மாதர்
குலைத்தோட்டி நகைப்பார் கூடி!