பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

நிற்பது முழுமை இழந்த ஒரு பகுதியாகத்தானிருக்கும் என்பது கணித சித்தாந்தம். ஆனால், பரம் பொருள் இந்தக் கணித நூல் நியதிக்கு அடங்காது. (உபநிசத்து பலகணி - ராஜாஜி)

என்றும் உள்ளது. எனக்கு இதுவும் நிறைவு அளிக்க வில்லை. இதற்கு மேல் இன்னும் ஒரு அடிக்குறிப்பு: 'ஈசா வாஸ்யம்' - ஈசுவரன் அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் நிறைந்திருப்பதால் பொய்யான உலகும் மெய் போன்று தோற்றமுடைய தாயிற்று. (பூர்ண இதம்) என்றும் காணப் படுகிறது.

ஒரு முறைக்குப் பன்முறை இவற்றைப் படித்தும் நான் எதையும் அறியாதவனாகத் தான் இருந்தேன். காலம் வீணாகிக் கழிந்து கொண்டிருந்தது.

ஒரு நாள் காலை; கீழ்வானில் செம்பருதி தோன்றி வெண்கரங்களை விரித்துக் கொண்டிருந்தது. என் முன் சற்று எட்ட ஒரு அழகான பசுவும், கன்றும் கட்டப்பட்டிருந்தன. இதயத்தில் எந்த ஒரு நோக்கமும் இன்றி நான் அவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தேன். உள்ளத்தில் பட்டென்று - ஆம், எனக்கு இதுகாறும் புலப்படாமலிருந்த அரிய உண்மை ஒன்று புலப்படத் தொடங்கிற்று.

ஓம் பூர்ணமத: - பசுவாகிய அது பூர்ணமானது; பூர்ண மிதம் - கன்றாகிய இதுவும் பூர்ணமானது. பூர்ணாத் பூர்ண முதச்யதே - பூர்ணமாகிய பசுவிலிருந்து பூர்ண மாகிய கன்று உதித்துள்ளது. பூர்ணஸ்ய பூர்ண மாதாய பூர்ண மேவா வசிஸ்யதே- பூர்ணமாகிய பசுவிலிருந்து பூர்ணமாகிய கன்றை எடுத்தும் பூர்ணமாகிய பசு எஞ்சியுள்ளது. ஓ! இது எத்தகைய புதையல்! ஈடு இணையற்ற - அறியாமை இருளை நீக்க, என் எளிய உள்ளத் துதித்த இளங்கதிரோனனைய அற்புத அறிவுப் புதையல்!

நூற்றுக்கணக்கான நூல்கள், ஆயிரமாயிரம் கவிதைகள், லட்சக்கணக்கான தேனினும் பாலினும் இனிய அருந்தமிழ்