பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/47

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

45

“கங்குலில் மதியம் போன்ற
கனித்தமிழ் சங்க நூல்கள்
எங்கணும் கண்கா ணாதே
இருட்டறைக் குள்ளிட் டேகி,
'அங்கதன் தூதோ, அன்றேல்
அருச்சுனன் தவமோ,-ஆற்றின்,
தங்கமும் வயிர முந்தான்
தரும், வாரித் தமிழ்நா டின்று!

பாரியைப் படிப்பில் கூடப்
பாராத பாரில், பாழும்
சேரியின் செழிப்பிற் காகச்
சிந்திப்பார் சென்றா ரென்றால்,
யாரையு மையு றும்பொய்
யாத்திகம் மலிந்த வூர்க்குள்,
ஏரியைக் காணா நீராய்
ஏமாற்ற மடைவீ" ரென்றாள்.