பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66



மேரீச னொடுமென் மாதர்
மேலெடுத் தெறிபந் தென்னப்
போரீச னாய ரக்கன்
போந்தெடுத் தெறிந்து, பொன்ற
மாரீசன் தனைம யக்கும்
மாயமா னாக்கி, மற்றப்
பாரீசன் ராமன் தேவி
பார்த்திடப் பணித்தா' னென்னும்,

ஆடியப் பொய்க ளாலும்
அழிப்பதற் காகா வாறாய்ப்
பாரியற் பண்பைப் பன்னிப்
பரவசப் படுத்தும் பண்டைச்
சீரியல் தமிழர் நூல்கள்
செவியுறச் சிந்திக் கின்ற
நேரிய னென என் நெஞ்சம்
நிரைவுற நேர்ந்த தன்றே!

செயலினில் பயிர்செ ழித்துச்
செறிவொடு கதிர்கள் முற்றி,
வெயிலினில் காய்ந்து திர்த்த
வெண்ணெலை யரிசி யாக்கிக்
கயலெனுங் கண்ணா ரட்டுக்
‘கவின் மலர்ச் சோறெ'ன் றுண்ண
வயலெனற் கிலைபோ லும் நும்
வளம்மிகு பதியி லென்றேன்.

“குரவுகள், கொடிகள், கொண்ட
குன்றிடைக் குளுமை கூர் நல்
லருவிக ளாகக் கண்ட
தன்றிமற் றருகி லண்டிக்
குருவிகள் கூடிக் குந்திக்
குடிக்கவோர் குளங்கொள் ளாதே.
தரவுக ளாய்நெல் கொண்டு
தழைக்குமூர் தானிஃ தென்றான்.