பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

77

காசினைக் கவரக் கல்லில்
கடவுளைப் படைத்த கையர்,
யோசனை புரிந்து மெய் , பொய்
யுணரவு மொப்பா ராகிப்
பூசனைப் புழுகுக் கொத்த
பொய்க்கதை புனைந்து, கல்வித்
தேசினை மறைத்தார், தேசம்
திசைகெட்டுத் தேம்பு மாறே!

‘தாமிர மதனைச் சாமி
தங்கமாய் மாற்று மென்று
சாமர மிரட்டி நாளும்
சாமவே தங்கள் பாடி,
மாமர மதனை வெட்டி
மருதினை நட்டா' ரென்னப்
பாமரம் பெருக்கி நம்மைப்
பணிவித்துப் பாழ்செய் தாரே!

பூவெனப் பூத்துப் பூங்கா
புதுமணம் பரப்பும் போது
மாவினில் குயிலும் பாடி
மன்னுயிர் மகிழ்வித் தாங்கு
நாவினில் சத்தி யத்தை
நவில நாம் பயின்றி ருந்தால்
கோவிலே உடலாய்த் தெய்வம்
குடிகொண்ட உளமாம் ஊரே!

வழுத்துறு குடிமக் கள், தம்
வாழ்வுக்கா யுழைத்து வைகல்
கழுத்தறுப் புக்குள் ளாகிக்
கம்பலை கண்ணீர் தேக்கி, -
யழுத்துறு மவல மெல்லாம்
அகற்றிட வேண்டி னுண்மை
தொழத்தகும் தெய்வ மாகித்
துலங்கிட வேண்டும்" மென்றேன்.