பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

93

"பங்குனித் திங்கள் நாளில்
பருதியும் நடுவான் பண்ணி
வெங்கதிர் வீழ்த்தி, வேர்த்து
வேகவே செய்யும் வேளை,
தங்கிடும் தளிர்,பூ வேம்புத்
தண்ணிழல் குந்தின், கூவும்
இங்கிதக் குயிலா னீர், நீர்
எம்மனோர்க் கினியிங் கையா!

குயிலாகி நீங்கள் கூவும்
குரலினுக் கொப்பக் குன்றின்
மயிலாகி நாங்க ளொன்றி
மன்றிடை மாண்பு மன்ன
வொயிலாக ஆடற் குள்ளேம்;
உவக்கவு முலகுண்" டென்றாள்,
கயலாகி மிளிருங் கண்ணாள்
கனிவுகூர்ந் தெனைக்கண் ணுற்றே!