உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

97

பண்பினைப் பறக்கப் பண்ணிப்
பணடத்தினைப் பிறக்க வைத்திங்
குண்பன வுண்டு வந்தாங்
குணர்வற வுறங்கி யோய்ந்து
விண்புக வேண்டு மென்னும்
வீணர்கள், மீண்டும் வந்திம்
மண்புக வேண்டா' மென்றே
மாங்குயில் பாடிற் றங்கே!

‘துள்ளாட்ட மாடிக் கூடத்
தொடர்கின்ற குட்டி யோடிவ்
வெள்ளாட்டை மேய விட்ட
விருத்தன் போல் நம்மை மேய்த்திங்
குள்ளாட்டிக் காக்கும் தெய்வம்
உயர்வானிற் காணே' னென்றே
கள்ளீட்டிக் களித்த
தும்பி காமரம் பயின்ற திங்கே!

'மலரியைந் தருந்த வைத்த
மதுவெறித் தும்பி யின்சொல்
சிலரியைந் தேற்றுத் தங்கள்
சிந்தையிற் கொள்வா ரேனும்,
பலரியைந் தெதிர்த்துப் பாழும்
பயமூட்டிப் பகைப்பா' ரென்றே
அலறியந் தோ'வென்
ரங்கோ ரத்தியி லணில்கத் திற்றே!

'உச்சிப்போ தாகும் போதிங்
குழவர்தந் துறுத்தும் மந்தை
மெச்சிப்போ மாறாய் மேனி
மெலிவு தீர்த் திடும்ம ரக்காப்
பச்சைப்பாய்ப் பந்தர், பாரீர்!
பருதியின் பகைமைக் காற்றோர்
நச்சிப்போந் திருப்பீ' ரென்றோர்
நாகணம் நவின்ற தன்றே!