பக்கம்:புராண மதங்கள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



- - - - - - - 54 புராண - மதங்கள் மின்றி உலவும் உருவங்கள், மேனி சிவப்பு, அதிலே ஒரு பளபளப்பு, உடை காவி, அதிலே ஒரு மினு மினுப்பு, மாலை உத்திராக்கம், அதற்கு பொன் மேல் மூடி, நெற்றியில் நீறு, அதிலே பரிமளத்துக்குப் பூச்சு, தங்கத் தாம்பாளத்தில் ராஜபோக உணவு, வெள்ளிக் கோப்பையில் வெந்நீர் , பளிங்கு கிண்ணத்தில் பனிநீர், ஜவ்வாதும் புனுகும் சிமிழில், ஜாதிக்காய் ஜாதிபத்திரி மற்றொன்றில், குளோப்பும் லஸ்தரும் உள்ள கொலு மண்டபம், அதற்கு அடுத்து அந்தப்புர மெனத்தக்க அலங்கார படுக்கை அறை, அங்கு நிலைக் கண்ணாடி, நேரே கண்கவரும் கட்டில். அதன்மீது பட்டுமெத்தை அதன்மீது பரிமள முல்லை . திவ்வியமான திண்டு தலை யணை, அதன்மீது சொகுசாகச் சாய்ந்து சுந்தரமிக்க தம்பிரான் சைவத்தின் பிரதிநிதியாக விளங்குகிறார். மக்கள் காண்பது இது! ஆனால் இதனையா விரும்புவர் மக்கள்? இக்காட்சிக்கா முன்னாள் மன்னர்கள் மக்க ளின் பொருளை மடத்துக்குத் தந்தனர். மக்களில் சிலரை மடாதிபதியாக்கினர்? இல்லை! இல்லை! மற்றை யோர் வாழ்க்கையில் உழன்று வருவதால் சன்மார்க்கத் தொண்டாற்ற, தமிழ்த் தொண்டாற்ற வசதியும் நேர மும் கிடைக்காது வாடுகின்றனர். அக்குறை நீக்கி மக் கள் தொண்டுக்கெனவே சிலர் இருத்தல் நன்று என்ற நன்னோக்குடன் மடங்களை நிறுவினர், அதிபர்களை ஆள விடுத்தனர் ! அந்தோ விபரீதமே! மடாதிபதிகள் மடத்தை ஆள்வதைக் காண்கிறோம். மக்களிடை ஆள்வதில்லை. மக்களிடை வருவதுமில்லை. இந்நிலை சிற் றரசர்போல், சீமான் போல், முதலாளி போல் மடாதி பதிகள் வந்துவிட்டனர் எனில், மக்கள் எங்ஙனம் ஆத ரிப்பர், எங்ஙனம் பொறுப்பார்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராண_மதங்கள்.pdf/55&oldid=1033294" இலிருந்து மீள்விக்கப்பட்டது