பக்கம்:புராண மதங்கள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



58 புராண - மதங்கள் மடாதிபதிகள் கடமை அவர் கூறிய முறையிலேயே, நம் நாட்டுக் கவிகள், தேய்ந்த பாதையிலேயெ நமது உருளும் வண்டியைச் செலுத்தினர், காரணம், அது வசதியாக இருந்தது. அதுவும் கிடைத்தது. மடாதிபதிகளில் சிலர் இதனை ஆதரித்தளர். இதன் பயனாகத்தான் "தமிழ்ப் புத்தக சாலையில் ஒன்றை எடுத்தால்" அங்கிங்கெனாதபடி என்றுதான் ஆரம்பிக்கும். அந்தப் பழைமை நெளியும். புதுமை எனில் புருவத்தை நெளித்துக்கொண்டு புலவர் கள் போய் விடுவர். "முந்தி இருந்தது பழைய பதிப்பு இப்பொழுதிருப்பது புதிய பாக்கட் சைஸ் பதிப்பு. இவ்வளவுதான் வித்தியாசம்.' உலகத்தில் வேறு கருத்துகள் இல்லயா! உண்டு! எண்ணற்ற புதுப் புதுக் கருத்துகள் உண்டு. மறைந்து கிடக்கும் மாண்புகள் எவ்வளவோ உள. அவைகளை வெளிக்குக் கொண்டு வருதலும் புதுக் கருத்துரைக ளைப் பரப்புதலுமே மடாதிபதிகள் செய்ய வேண்டிய கடமை. புராண இதிகாசங்களின் மூலம் மக்களிடம் வளர்க் கப்பட்டுள்ள மூடநம்பிக்கை, குருட்டுக் கொள்கை, இருட்டு எண்ணம் கூன் மனப்பான்மை ஓட்டப்பட மடாதிபதிகள் புலமையும் புதுமையும் பூத்த பொன் மொழியாளரை ஆதரித்துச் சிறு சிறு புத்தகங்கள் வெளியிட்டுப் பரப்ப வேண்டும், சீரிய சொற்பொழிவு கள் நிகழ்த்துவிக்க வேண்டும். அறிவுக் கதிரும் ஆராய்ச் சிக் கதிரும் யாங்கணும் பரவச் செய்தல் வேண்டும். ஜாதிமத பேதமெனும் பித்துப்பிள்ளை விளையாட்டை அடக்க வேண்டும். அன்பும் அமைதியும் பரவச் செய்தல் வேண்டும், அண்ணாந்து விண்ணைப் பார்த்து அழும் மனப்பான்மை ஒழியவும், உழைப்பில், உலகில் நம்பிக்கை பிறக்கவும் செய்தல் வேண்டும். இவைகளே காலத்தின் தன்மைக் கேற்றன. இவைகளை விடுத்து,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராண_மதங்கள்.pdf/59&oldid=1033298" இலிருந்து மீள்விக்கப்பட்டது