பக்கம்:புராண மதங்கள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



அண்ணாதுரை ஓரளவுக்குத்தான், என்ற போதிலும், ஒரு உயர் தர அதிகாரி, கோயில் காரியத்துக்கு அதிகமான பணத்தை இந்நாட்டு மக்கள் செலவிடுகிறார்கள், ஆனால் அந்த ஆர்வம், கல்விக்காகச் செலவிடுவது என் பதிலே வருவதில்லை, என்பதை உணருகிறார் - உணர்ந் ததை உள்ள உறுதியுடன் ஊராருக்கு உரைக்கவும் முன் வருகிறார், என்பதை, எடுத்துக்காட்டும் சம்பவ மல்லவா அது. கோழி கூவுகிறது, என்றல்லவா பொருள் ! சுயமரியாதைக்காரர் இந்தங் குறிப்புகளைக் கண்டு களிப்படைகிறார்கள். நாம் என்ன செய்வது! நம்மால் என்ன ஆகும்! -- என்ற பெருமூச்சுப் பேச்சு. நமது பாரம்பரிய வித்தை!! என்ன நேரிட்டாலும், இயற்கைக் கோளாறு முதற்கொண்டு, வேந்தனின் கொடுங்கோன்மை வரை யிலே, நாம் இதே மனப்பான்மையைத்தான் காட்டி வந்திருக்கிறோம். ஆறு, வெள்ளமானாலும், நாடு, காடானாலும், மன் னன், மிருகமானாலும், நாம், இவைகளைக் கட்டுக்குக் கொண்டு வரவோ, திருத்தவோ, முயன்றதில்லை - அந்த எண்ணத்துக்கே இடமளிப்பதில்லை எல்லாம் சரியாக நடைபெறும்படி கவனித்துக் கொள்ள ஒருவர் இருக் கறார் - அவர் இருக்கும்போதே, சில விபரீதங்கள் நேரிட்டால், நாம் எப்படித் தடுக்க முடியும் ! நம்மால் ஆகிற காரியமா!! - என்று எண்ணியே, நமது முன் னோர்கள், பல பிரச்சினைகளைக் கவனிக்காமலிருந்து விட் டனர். ஆழாழி கரையின்றி நிற்கவில்லையா! - நம்மாலா இந்த அற்புதம் நடைபெறுகிறது - கல்லினுள் தேரைக் கும் கருப்பைக்குள் முட்டைக்கும் ஆண்டவன் உண வளிக்காமலா போகிறார் - காட்டில் வளரும் பலகோடி Gori

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராண_மதங்கள்.pdf/72&oldid=1033311" இலிருந்து மீள்விக்கப்பட்டது