72
புரண-மதங்கள்
உயிர்க்கு ஊட்டி உணவளிப்பதாரோ—என்றும் பேசி மேதாவிகள் என்று மட்டுமல்ல, ஞானவான்கள் என்றும் பெயர் எடுத்துக் கொள்வதிலேயே, பலருடைய நாட்டம் இருந்து வந்தது. சிற்சில சமயங்களிலே, ஆண்பனையைப் பெண்பனையாக்கி விடுவது, எலும்பை எழிலுடை மங்கையாக்குவது என்பன போன்ற அற்புதங்கள் நடைபெற்றன என்று கூறுவதும்கூட, தேவலீலைகளாகக் கருதிக் கூறப்பட்டவையே யொழிய, ஆராய்ச்சியினால் ஏற்பட்ட விளைவுகள் என்ற முறையிலே அல்ல,
குஷ்டம் அவனுக்கு—அவனைக் கண்டதும், என்ன தீவினை செய்தானோ முன்பு, இப்போது இப்படி அனுபவிக்கிறான், என்று எண்ணத்தான் இன்றும் நம்மில் பலருக்கு முடிகிறதே தவிர, குஷ்ட நோய் ஏற்படும் காரணம் என்ன, இதை நீக்கும் முறைகள் யாவை, என்பன போன்றவைகளிலே, மனம் செல்வதே இல்லை. நமக்கு மட்டுமா! வைத்தியருக்கே கூடத்தான்!
என்னமோ அப்பா, என்னிடம் உள்ள அபூர்வ மருந்தைத் தருகிறேன்—உன் 'விதி' எப்படியோ அதன்படி நடக்கட்டும், என்று, கூறித் தானே அவரும் மருந்தளிக்கிறார்.
இவ்வளவு, சோர்வு—சந்தேகம்—சலிப்பு—இருப்பதற்குக் காரணம், ஒரு சம்பவத்தையோ, நிலையையோ காணும்போது, ஏன் இவ்விதமிருக்கிறது, இதை என்ன செய்தால் மாற்றலாம் என்ற அறிவுச் சுறுசுறுப்பு ஏற்படாததுதான். ஆயிரமாயிரம் விஷயங்களை, இந்த மனப்பான்மை காரணமாக, நாம் கவனிக்காமலிருந்து விட்டோம்-காலமாற்றத்தை, உலகின் மற்றப் பகுதிகளிலே உள்ள நிலைமைகளைக் கவனிக்கும் பண்பை இழந்து விட்டோம், காக்கை ஏன் கருப்பாகவே இருக்கிறது - கருப்புக் கோழி ஏன் வெள்ளை முட்டை வைக்கிறது—கடற் தண்ணீர் ஏன் உப்பாகவே இருக்கிறது, என்று