அண்ணாதுரை
77
ருக்கு வயது அறுபத்துமூன்று இந்த வயதிலேயும் அவருடைய ஆராய்ச்சி ஆர்வம் அப்படி இருக்கிறது. இனிக் கடலுக்குள் இரண்டரை மைல் ஆழம், சென்று பார்க்கப் போகிறாராம் என்ன உள்ளன என்பதை எல்லாம்.
செவ்வாய், சந்திரன், இவைகளை எல்லாம் கண்டறியும் ஆராய்ச்சி நடந்தபடி உள்ளன.
கிரஹங்களிலே காணப்படும் நிலைமைகளை எல்லாம் ஆராய்கிறார்கள்.
இந்த மனப்பான்மையின் காரணமாக, எவ்வளவோ, பயனுள்ள முறைகளையும், வசதி தரும் வழிகளையும் கண்டுபிடிக்க முடிகிறது.
கோளம், மட்டுந்தானா, ஆராய்ச்சியாளர்களின் கவனத்திற்கு வந்தது. முன்னாலே கூறியிருக்கிறபடி, கொசுவுந்தான்!
சில பூபாகங்களில், வளம் உண்டு, மழை இருப்பதால்—ஆயினும் அவை, மனிதர் வாழ்வதற்கு ஏற்றபடி இல்லாமல், போய்விட்டன.
நாம் கூறுவோம், கல்லிலே நார் உரிப்பாயோ! மணலைக் கயிறாக்குவாயோ!—என்று.
அவர்கள் அவ்விதம் கூறுவதில்லை. மக்களின் வாழ்க்கைக்கு, வசதியற்ற முறையிலே, உள்ள அந்தச் சதுப்பு நிலத்தையும் அவர்கள், ஆராயாமலில்லை.
சில சதுப்பு நிலப் பகுதிகளிலே, மனிதனையும், பச்சைப் பயிரையும் வாழ விடாமல் செய்வது, துஷ்ட மிருகங்கள்கூட அல்ல, மிக மிகச் சாதாரணமான ஜீவன்—கொசுக்கள்!