அண்ணாதுரை
79
குள்ளே போகின்றன—அங்கே அமைக்கப் பட்டுள்ள திரைகள் உள்ளனவே, அவைகளிலே சிக்கிச் சாகின்றன!
எவ்வளவு சிந்தனையைச் செலவிட்டிருக்கவேண்டும். இப்படி ஒரு கருவி அமைக்க.
கொசு விஷயந்தான் என்றாலும், ஆராச்சியாளர்களின் 'மூளை' இது பற்றியும் சிந்திக்காமலில்லை. இந்தக் கருவி கண்டறிவதற்கான செலவை, அமெரிக்க சர்க்கார் ஏற்றுக்கொண்டதாம். இந்த 'பாடும் பெட்டி'யின் விலை, சுமார் இருநூறு டாலர் ஆகிறதாம்.
கோளங்கள் முதற்கொண்டு கொசு வரையிலே, விஷயங்களை அறியவும், விளக்கம் பெறவும், அவர்களின் அறிவு வேலை செய்கிறது; நாமோ, இன்னும், கல் லானை கரும்பு தின்ற கதையைப் படித்து மகிழ்ந்து கொண்டு இருக்கிறோம்.
✽✽✽
பூவையரைப் பூரிப்புடன் புகழ்வதிலே புராணம், முதலிடம் பெற்று விளங்குகிறது! சாது சன்யாசிகள் பட்டியிலே வந்தவர்கள் வேண்டுமானால், தேசத்தின் நிலைமையைப்பற்றியும், அதன் ஆபாசத்தைப் பற்றியும்,
"காகமோடு கழுகலகை நாய் நரிகள்
சுற்று சோரிடு துருத்தி
கால் இரண்டு, நவவாசல் பெற்றுவளர்
காமவேள் நடன சாலை
மோக ஆசைமுறி விட்ட பெட்டி
மும்மல மிருந்து ஒழுகு கேணி'