பக்கம்:புராண மதங்கள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



அண்ணாதுரை இருந்தால் என்ன, கூழானாலும் கும்பி நிரம்பினால் போதும் என்று கூறும் குரும்பரின் செயலை நினைவிற் குக் கொண்டுவரும் புராணிகர்களின் சொல் ஆண்ட வனின் செயலை வர்ணிக்கும் இடத்திலும் பெரும்பகுதி, ஆடவர் சம்பந்தப்பட்ட சமயங்களிலே, குத்து, வெட்டு, அடி, பிடி, நசுக்கு, வெல், சொல் என்ற செயல்கள் செய்தாரென்றும், மாதர் சம்பந்தப்பட்ட இடங்களைக் குறிக்கும்போது குலவு. தழுவு, கூடு, பாடு, இளகு, பழகு, விரும்பு, நெருங்கு, ஆரத் தழுவுதல், இடைசோர ஆடுதல். நிலவில் குலவுதல் புன பாடுதல், கானம் பாடு தல் என்பன போன்ற செயல்களைச் செய்தனர். அதா வது, இயற்கையாக வர்ணனைகளைத் தந்தால் சுவை இருக்குமோ என்று அறிந்து சித்திரிக்கப்பட் டிருக்கும். இதனால் தான் ' புராணங்களை போதை தரும் லேகியம்" என்று கூறினோம். போதை உடல் வளத்தைக் கெடுத்து உள வலுவைப் போக்குவது போன்ற புராணமும் மக்களின் மதியை மாய்த்து விடுகிறது. ஆகவேதான், மக்களின் மதி துலங்க வேண்டும் என் பதிலே அக்கரை கொண்டவர்கள், இந்தப் புராணப் போதையை உட்கொள்ளாதீர்கள் என்று கூறுகின் றனர். பேதையின் சுவையிலே இலயிப்போரும், அந் தப் பொருளை விற்போரும் இருப்பது போலவே, புராண மயக்கத்தா லாழ்ந்தவரும், புராணத்தை வாணி பம் செய்பவரும் உளர். அவர்கள் ஆயாச மடைவதற் குக் காரணம் இருக்கிறதல்லவா. அவர்களின் ஆயா சத்தை எண்ணி நமது நோக்கத்தை எண்ணி நமது நோக்கத்தை விட்டுவிட முடியுமா, விட்டு விடுவது முறையாகுமா. நாமோ சரிந்து கொண் டிருக்கும் சம தாயத்தைச் சீராகத் திருத்தி அமைக்க விரும்புகிறோம். தாழ்நிலை அடைந்த இனத்தவர் மீண்டும் தலை தூக்கி வாழ வழிகாண விழைகிறோம். இங்ஙனம் முயற்சி செய்யாத காரணத்தால், முன்னாளில் முடி தரித்து வாழ்ந்த இனம் இன்று மூலையில் உலாவும் காட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராண_மதங்கள்.pdf/82&oldid=1033321" இலிருந்து மீள்விக்கப்பட்டது